ஜிபி முத்துவின் பவர்...! இந்த வாரத்தின் பிக்பாஸின் சிறந்த போட்டியாளர்கள் யார் தெரியுமா?
பிரபல டிவியில் ஒளிபரப்படும் பிக் பாஸ் சீசன் 6 ல் சிறந்த போட்டியாளர்கள் தெரிவில் ஏகமனதாக இருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
பிக் பாஸ் சீசன் 6 விறுவிறுப்பாக தற்போது நடைபெற்று வருகிறது. இதில் முக்கியப்போட்டியாளர்களாக ஜி.பி. முத்து, மகேஸ்வரி, ஜனனி, தனலட்சுமி, அசீம் உள்ளிட்ட 20 போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளார்கள்.
ஜிபி முத்து
தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 6, ஆரம்பித்து 5 நாட்களில் பல பிரச்சினைகள் மற்றும் சண்டைகள் ஏற்பட்டது. இதில் “வயதுக்கு மரியாதை கொடுக்காமல் பேசுகிறார் தனலட்சுமி ” என ஜிபி முத்து ரசிகர்கள் கடந்த சில தினங்களாக சமூக வலைத்தளங்களில் வறுத்தெடுத்து வருகிறார்கள்.

இந்நிலையில் சிறந்த போட்டியாளர்களாக சாந்தி மற்றும் ஜிபி முத்து 20 போட்டியாளர்களால் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக ஜிபி முத்து கருத்து தெரிவிக்கையில், “வெள்ளை வேட்டி சட்டை போட்டதுக்கு இன்று மரியாதை கிடைத்து இருக்கிறது ”என சந்தோஷத்தின் உச்சக்கட்டத்தில் தெரிவித்துள்ளார்.
இது தற்போது வெளியாகியிருக்கும் ப்ரொமோவில் காட்டப்பட்டு இருக்கிறது.