மேடையில் பாடிக் கொண்டிருந்த பிரபல பாடகர்! திடீரென சுருண்டு விழுந்த சோகம்: நடந்தது என்ன?
பிரபல பாடகரான பென்னி தயாள் மேடையில் பாடிக்கொண்டிருக்கும் போது திடீரென சுருண்டு விழுந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாடகர் பென்னி தயாள்
தமிழ் சினிமாவில் சிறந்த பாடகர்களில் ஒருவராக இருப்பவர் பென்னி தயாள். ஏராளமான மொழிகளில் பல பாடல்களை பாடியுள்ள இவர், சில ரிவி நிகழ்ச்சியில் நடுவராகவும் இருக்கின்றார்.
இவர் சமீபத்தில் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் எதிர்பாராத வகையில் நடந்த சம்பவம் ஒன்று அரங்கேறி உள்ளது தொடர்பான விஷயம் இணையத்தில் அதிக பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் பிரபல கல்லூரி ஒன்றில் நடந்த நிகழ்ச்சியில் பென்னி தயாள் கலந்து கொண்டிருந்த நிலையில், மேடையில் நின்று ஊர்வசி பாடலை பாடிக்கொண்டிருந்தார்.
அப்பொழுது அங்கே நடக்கும் நிகழ்வுகளை படம் பிடித்து கொண்டு பறந்த படி இருந்த டிரோன் கேமரா, பென்னி தயாள் அருகே வட்டமிட்டபடி இருந்துள்ளது.
அந்த சமயத்தில், திடீரென அந்த டிரோன் கேமரா, பென்னி தயாளின் தலை பகுதி மற்றும் கை விரல்களை தாக்கி உள்ளது. நொடியில் மேடையில் நிலைகுலைந்து சுருண்டு விழுந்துள்ளார்.
உடனடியாக அவரை மீட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அவரது பின் தலை மற்றும் கை விரல்கள் காயம் ஏற்பட்டுள்ளதாம்.
இன்ஸ்டாகிராம் பதிவு
இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பென்னி தயாள் கூறுகையில், தனக்கு நடந்த விபத்து குறித்து விவரித்த பென்னி தயாள், தன்னிடம் நலம் விசாரித்த அனைவருக்கும் நன்றிகளையும் தெரிவித்திருந்தார்.
அதே போல, டிரோன் கேமராவின் விசிறிகள் தனது தலையின் பின்புறம் மற்றும் கைவிரயல்களில் காயம் ஏற்படுத்தியதை பற்றியும் இந்த வீடியோவில் பென்னி தயாள் பேசி இருந்தார்.
மேலும், அனைத்து கல்லூரிகள், நிர்வாகங்கள் உள்ளிட்டவை சான்றிதழ் பெற்ற டிரோன் கேமரா ஆப்ரேட்டர்களை பயன்படுத்த வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.