ஏன் மீன் சாப்பிட வேண்டும் என்று தெரியுமா?
மற்ற அசைவ உணவுகளை விட கடல் உணவான மீனில், சாச்சுரேட் கொழுப்பு உள்ளதால் இது உடல் எடையை அதிகரிக்காது.
மேலும் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான பேட்டி ஆசிட்களான ஒமேகா 3 உள்ளது.
இதனால் உடலுக்கு நல்ல ஆற்றல் கிடைப்பதோடு மட்டுமல்லாமல், டயட்டில் இருப்போருக்கு உகந்த ஒன்றாகும்.
கிரில்டு மீன் மற்றும் சிப்ஸ்
எண்ணையில் மீனை பொறுத்தெடுப்பதற்கு பதிலாக எண்ணெய் இல்லாமல் கிரில் செய்து சாப்பிடலாம். அதனுடன் அடுப்பில் சுட்டப்பட்ட சிப்ஸ் செய்து சாப்பிட்டால் ஆரோக்கியமாக இருக்கலாம்.
சிப்ஸுடன் மீன் டாகோஸ்
நறுக்கிய கீரை, வெட்டிய தக்காளி ஆகியவற்றை மீன் மீது தூவி அதனுடன் மெக்சிகன் மயோனஸை அதன் மேல் ஊற்றி சிப்ஸுடன் பரிமாற வேண்டும்.
மீன் மற்றும் சிப்ஸ் பர்கர்
மீனை கிரில் செய்து கீரை, தக்காளி மற்றும் டால்டர் சாஸ் ஆகியவற்றை அடுக்கிய பர்கர் பன் மீது வைத்து மேலே ஒரு பன்னை வைத்து மூடி சிப்ஸ் உடன் சேர்த்து சாப்பிடலாம்.
இவ்வாறு மீனை செய்து சாப்பிடுவதால் நமக்கு உடல் ரீதியாக பல நன்மைகள் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.