Momos விற்று லட்சக்கணக்கில் வருமானம் ஈட்டும் நபர்: எங்கு தெரியுமா?
பெங்களூரை சேர்ந்த மோமோ விற்பனையாளர் ஒருவர் ஒரு நாளுக்கு லட்சக்கணக்கில் சம்பாரிக்கும் காணொளியொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பொதுவாக மொத்த வியாபாரிகளின் மாத வருமானத்தை விட சில்லறை வியாபாரிகளின் மாத வருமானம் அதிகமாக இருக்கும். மொத்த வியாபாரிகள் பல விதிமுறைகளுக்கு கீழ் தன்னுடைய வியாபாரத்தை கொண்டு செல்வார்கள்.
ஆனால் இவர்கள் கடையை நேரத்திற்கு திறக்க வேண்டும் என்ற விதிமுறையை மாத்திரம் கொண்டு, லட்சக்கணக்கில் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.
லட்சக்கணக்கில் குவியும் பணம்
அந்த வகையில், பெங்களூரில் ஒரு பிரபலமான தெருவில் மோமோ விற்பனை செய்யும் நபர் ஒருவர் அவருடைய வருமானம் குறித்து பகிர்ந்து கொண்ட காணொளி இணையவாசிகளை கவர்ந்துள்ளது.

குறித்த வியாபாரி மோமோ விற்பனை செய்து சுமாராக ரூ.3.1 மில்லியன் ரூபாயை மாத வருமானமாக பெறுவதாகவும், தினமும் சுமார் ரூ.100,000 -ஐ பெறுவதாகவும் கூறியுள்ளார்.
இந்த வருமானத் தொகையை பார்க்கும் பொழுது இந்தியாவில் உள்ள பல பி.காம் பட்டதாரிகளின் சம்பளத்தை விட இந்த தொகை அதிகமாக உள்ளது.
இவ்வளவு மவுசு ஏன்?
காணொளி வைரலான பின்னர், இணையவாசிகளுக்கு குறித்த கடை ஏன் இவ்வளவு பிரபலமாக உள்ளது என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஒரு மணி நேரத்திற்குள் 118 மோமோஸ் தட்டுகளை விற்பனையாகியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து கடை மூடும் நேரத்தில் சுமாராக 950 தட்டுகள் விற்பனையாகியுள்ளது என்றும் ஒவ்வொரு தட்டும் ரூ.110 என்ற விலைக்கு கொடுக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது.
ஆக மொத்தத்தில் கடையின் ஒரு நாள் வருமானம் 100,000 ரூபாய் இருக்கும். இதற்கு குறித்த கடையின் உரிமையாளரின் கடின உழைப்பு மாத்திரமே காரணம் என காணொளியை வெளியிட்டவர் பாராட்டியுள்ளார்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |