சர்க்கரை வியாதியுள்ளவர்கள் வாழைப்பூ சுண்டல் சாப்பிட்டால் என்ன நடக்கும்?
பொதுவாக நாம் இயற்கையாக கிடைக்கும் சில உணவுகளை சமைத்து சாப்பிடுவதன் மூலம் நமக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன.
அந்தவகையில் வீடுகளில் இலகுவாக கிடைக்கும் வாழைப்பூவில் கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, ஜிங்க், காப்பர், வைட்டமின் ஏ, வைட்டமின் பி1 மற்றும் வைட்டமின் சி உள்ளிட்ட சத்துகள் நிறைந்துள்ளன.
இதனால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தாராளமாக சாப்பிடலாம். அந்தவகையில் வாழைப்பூ சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து தொடர்ந்து பார்க்கலாம்.
வாழைப்பூவினால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்
1. பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சினையை வாழைப்பூ சரிச் செய்கின்றது.
2. பருவமடைந்த பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல், மற்றும் சூட்டினால் ஏற்படும் வயிறு வலி ஆகிய பிரச்சினைகளையும் வாழைப்பூ சரிச் செய்கின்றது.
3. உடலிலுள்ள இரத்தத்தில் தேவையற்ற கொழுப்புக்கள் காணப்படுமாயின் அவற்றையும் இந்த வாழைப்பூ சரிச் சரிச் செய்கின்றது.
4. வாழைப்பூவை அடிக்கடி சாப்பிடுவதால் ரத்த ஓட்டம் சீராகும்.
5. வயிற்று பிரச்சினைக்கு உடனடி தீர்வை வாழைப்பூ சரிச் செய்கின்றது.
6. உடல் வெப்பநிலையை குறைக்க வேண்டும் என நினைப்பவர்கள் அடிக்கடி மதிய உணவில் எடுத்து கொள்ளலாம்.
7. மலட்டுத்தன்மை பிரச்சினையுள்ளவர்கள் தயக்கமின்றி இந்த பூவை சாப்பிடலாம்.
8. ரத்த அழுத்தம், ரத்த சோகை ஆகிய நோயுள்ளவர்கள் வாழைப்பூ சாப்பிட்டால் காலப்போக்கில் சிறந்த பயன் கிடைக்கும்.
9. சர்க்கரை வியாதியுள்ளவர்கள் வாழைப்பூ சாப்பிட்டால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைத்து சர்க்கரையின் அளவை பேணுகின்றது.
10 மூலப் பிரச்சினையுள்ளவர்களுக்கும் இது சிறந்த மருந்தாக இருக்கின்றது.
வாழைப்பூவை எப்படி சாப்பிடலாம்?
வாழைப்பூவிலுள்ள நரம்பை பகுதிகளை நீக்கிவிட்டு நன்றாக வேக வைக்க வேண்டும்.
வாழைப்பூவை அவித்தோ, பொரியல் செய்தோ, பருப்பு போட்டு கூட்டு செய்தோ சாப்பிடலாம் உப்பு சேர்த்தால் போதும். மேலும் அவித்து அதில் வரும் சாற்றை பருகலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |