கருப்பை நீர்க்கட்டியால் மலட்டுத்தன்மை ஏற்படுமாம்: உஷார் பெண்களே!
பொதுவாக பெண்கள் மாதாந்த மாதவிடாய் சீரற்று காணப்படும் போது அதில் கவனம் செலுத்துவது குறைவு. இது போன்று சின்ன பிரச்சினைகளை ஆரம்பத்தில் சரி செய்யாவிடின் அது பெரிய விளைவுகளை ஏற்படுத்தும்.
சிரற்ற மாதவிடாயினால் கருப்பை நீர்கட்டி என்னும் கோளாறு ஏற்படுகிறது. இதனை ஆங்கிலத்தில் பாலிசிஸ்டிக் ஓவரியன் சின்றோம் (Polycystic Ovarian Syndrome)என அழைப்பர்.
இந்த பிரச்சினை அதிகமாக திருமணமான பெண்களுக்கு ஏற்படுகிறது. கருப்பையில் குழந்தை இல்லாத பட்சத்தில் நீர் நிரம்பிய ஒன்றினைந்து கட்டிகளாக கர்ப்பபையில் தோன்றுவதன் மூலமாக பாலிசிஸ்டிக் ஓவரியன் சின்றோம் ஏற்படுகிறது.
அந்த வகையில் இந்த நோய் நிலைமை வராமல் இருப்பதற்கு என்ன சாப்பிடலாம்? என்ன செய்யலாம் குறித்து தெரிந்துக் கொள்வோம்.
மாதவிடாய் என்றால் என்ன?
பருவமடைந்த பெண்களுக்கு கர்ப்பபையில் சின்ன முட்டைகள் உருவாகி அவை ஹார்மோன்களின் சுழற்சிக்கு உட்பட்டு உடைவதன் மூலம் மாதவிடாய் ஏற்படுகிறது. இது 13 வயது முதல் 18 வரை பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய்.
தொடர்ந்து 19 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு ஹார்மோன்களின் வேறுபாடால் மாதவிடாய் சுழற்சியில் மாற்றம் ஏற்படுகிறது. இந்த ஹார்மோன் சுழற்சியினால் கருப்பை புறணிகள், வலுவாக தொடங்குகிறது.
கருப்பை நீர்கட்டி ஏன் ஏற்படுகிறது?
நோய்க்கான சரியான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை, பெண்களுக்கு ஏற்படுகிற ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வுகளால் இந்நோய் உண்டாகிறது என ஆராய்ச்சிகளினால் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த பிரச்சினைகள் பொதுவாக 15 முதல் 25 வயதுக்குள் திருமணமான பெண்களுக்கு அதிகமாக ஏற்படுகிறது.
இந்நோய் அதிகமான வேலைப்பழு மற்றும் மனழுத்தம் போன்ற காரணங்களாலும் ஏற்படும் வாய்ப்புக்கள் இருக்கிறது.
இதனால் பல திருமணமான பெண்கள் கருத்தரிக்க இயலாமல் போகிறார்கள். இதற்கு தமது அலட்சியம் தான் முதல் காரணம் எனவும் கூறலாம்.
கருப்பை நீர்கட்டி இருக்கிறதை அறிந்துக்கொள்ளும் வழிமுறைகள்!
- அதிகமாக ஹார்மோன் சுரப்பதால் முகத்தில் அதிகம் ரோமம் வளர்தல்
- தலைமுடி கொட்டுதல்
- குரல் வேறுபடுதல்
- முகத்தில் பரு
- உடல் எடை அதிகரித்தல்
- மன அழுத்தம்
- மலட்டுத்தன்மை
கருப்பை கட்டி கரைய வைக்கும் சித்த மருத்துவம்
முதலில் கழற்சிகாயை காயாகவோ அல்லது பொடியாகவோ வாங்கிக் கொள்ளுங்கள். இந்த காய் நாட்டு மருத்துவ கடையில் கிடைக்கும்.
இந்த கழற்சிகாய் பார்ப்பதற்கு ஒரு கோலிகுண்டு போல் இருக்கும். இதன் மேற்புறம் மிகவும் கடினமாக காணப்படும்.
தொடர்ந்து காயின் மேல் புற ஓட்டை ஒரு பக்கத்தால் உடைத்தால் அவற்றின் உள்ளே ஒரு பருப்பை வெளியே எடுக்க வேண்டும்.
இது போன்று அந்த காயை உடைத்து அதனுள் இருக்கும் பருப்புடன் 3 அல்லது 4 மிளகு சேர்த்து உட்கொள்ள வேண்டும்.
சிறிது நேரத்திற்கு பிறகு கொஞ்சம் மோர் குடிக்க வேண்டும். இவ்வாறு ஒரு மாதக்காலம் வரை தினமும் சாப்பிட்டு வர வேண்டும்.
தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கருப்பையில் இருக்கும் நீர்கட்டி கரையும். இனி தோன்றுவதற்கான சாத்தியகூறும் குறைவாக தான் காணப்படுகிறது.
முக்கிய குறிப்பு: தொடர்ந்து வேறு நோய்களுக்கு மருந்துகள் குடிப்பவர்கள் இதனை எடுத்துக் கொள்ளக் கூடாது. வைத்தியரின் ஆலோசனையை நாடுவது சிறந்தது.