கைகளில் கறை படாமல் வாழைப்பூவை ஈஸியாக சுத்தம் செய்ய வேண்டுமா? அப்போ இதை கைகளில் தடவினால் போதும்..
பொதுவாக நாம் வீடுகளில் மதியம் அல்லது இரவு உணவுகளில் அதிகமான காய்கறிகள் எடுத்துக் கொள்வோம்.
இந்த காய்கறிகளிலிருந்து வரும் ஊட்டச்சத்துக்கள் நமது உடலில் இருக்கும் உறுப்புகள் வளர்ச்சி மற்றும் அவற்றின் இயக்கத்திற்கு உதவியாக இருக்கிறது.
ஆனால் காய்கறிகள் சமைக்கும் போது நமது கைகளில் சில கருப்பு நிற கறைகள் இருக்கும். இதனை சீக்கிரத்தில் கைகளிலிருந்து போக்கவும் முடியாத நிலை ஏற்படும்.
இதனால் சில சமைக்கும் கைகளுக்கு உறைகள் போட்டுக் கொண்டு சமைப்பார்கள். இதனால் கறைகள் கைகளுக்கு படாமல் தப்பித்துக் கொள்ளலாம்.
இவ்வாறு கறைகளை எல்லா காய்கறிகளும் ஏற்படுத்தாது உதாரணமாக , கத்திரிக்காய், வாழைக்காய், பட்டர்காய், சுண்டக்காய், வாழைப்பூ ஆகிய காய்கறிகளை கூறலாம்.
இதனை எவ்வாறு கறைகள் இல்லாமல் சமைக்கலாம் என்பதற்கு நமது முன்னோர்கள் சில டிப்ஸ்கள் வைத்துக் கொள்வார்கள்.
அந்தவகையில் வாழைப்பூ சுண்டலுக்கு கைகளில் கறைப்படாமல் எவ்வாறு சமைப்பது என்பது தொடர்பில் தெளிவாக தொடர்ந்து தெரிந்துக் கொள்வோம்.
தேவையான பொருட்கள்:
மோர் - 2 டேபிஸ்ஸ்பூன்
எண்ணெய் அல்லது உப்பு - தேவையானளவு
சுத்தம் செய்யும் சில படிமுறைகள்
1. முதலில் உங்களுக்குடைய கைகளை சுத்தமான நீரில் கழுவிக் கொள்ள வேண்டும்.
2. வீட்டிலிருக்கும் உப்பை ஒரு கலவையாக கலந்து தண்ணீரில் இரு கைகளையும் நனைத்துக் கொள்ள வேண்டும்.
3. வாழைப்பூவை எடுத்து அதனை ஒவ்வொரு இதழையும் தனியாக பிரித்தெடுக்க வேண்டும்.
4. வாழைப்பூவை பிரிக்கும் போதே உள்ளிருக்கும் பூக்கள் மலர்ந்து விடும். அப்போது அதிலிருக்கும் நரம்பு போன்ற அமைப்பை எடுத்து விட வேண்டும்.
5. அந்த நரம்பு தொகுதியுடன் சமைத்தால் வயிற்றுப்போக்கு அல்லது வலி ஏற்படுத்தும், இதனால் கண்டிப்பாக அதனை நீக்க வேண்டும்.
6. வாழைப்பில் நீக்க வேண்டிய நரம்பை வாழைப்பூ வெள்ளை கலர் வரும் வரை தான் எடுக்க வேண்டும். மேலும் வாழைப்பூவில் நுனி பகுதியில் நரம்புகள் இருக்காது, அதனால் அதனை எடுக்க தேவையில்லை.
7. இதனை தொடர்ந்து வாழைப்பூவில் ரப்பர் போன்ற மற்றொரு இதழ் இருக்கும் அதனையும் நீக்குவது அவசியம்.
8. மேற்குறிப்பிட்ட தேவையற்ற பாகங்களை அகற்றிய பின்னர் வாழைப்பூவை கட்டாக சேர்த்து சிறிது சிறிதாக அரிய வேண்டும்.
9. இவ்வாறு அரைந்த வாழைப்பூவை மோர் கலந்த நீரால் நன்கு அலச வேண்டும்.
10 இறுதியாக இதனை பூவை ஒரு பாத்திரத்தில் போட்டு சமைக்கலாம்.
முக்கிய குறிப்பு
எண்ணெய் அல்லது உப்பு கைகளில் தடவி இருப்பதால் வாழைப்பூவை அரியும் போது கைகளும் சேர்த்து காயம் பட வாய்ப்புகள் இருக்கிறது.