சாப்பிட பின் நடக்கும் பழக்கம் இருக்கிறதா? அப்போ உங்கள் உடலில் இப்படியொரு மாற்றம் இருக்கும்!
பொதுவாகவே நடைபயிற்சி என்பது நமது உடலுக்கு மிக முக்கியமாகும். நடைபயிற்சி செய்வதன் இடுப்பளவு மற்றும் தொப்பை பெருமளவு குறையும் அது மட்டுமில்லாது உடல் ஆரோக்கியம் மேம்பட்டு, வாழ்நாளின் எண்ணிக்கையும் கூடும்.
இந்த நடைப்பயிற்சி பழக்கத்தை தினமும் கடைப்படிப்பதால் இதய நோய்கள் மற்றும் பக்கவாதம் அபாயம் குறையும். அந்தவகையில், சாப்பிட்ட பிறகு நடைபயிற்சி செய்தால் உடலில் நடக்கும் நல்ல மாற்றங்கள் என்னென்ன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
சாப்பிட்ட பின் நடைப்பயிற்சி செய்தால்
சாப்பிட்ட பிறகு நடப்பது உங்கள் இரத்த சர்க்கரையை சீராக்க உதவும். இதற்காக நீண்ட நடைப்பயணத்தை மேற்கொள்ள வேண்டியதில்லை 2-5 நிமிடங்கள் நடந்தால் போதும்.
சாப்பிட்ட பிறகு நடப்பது செரிமானத்திற்கு உதவும். நடைபயிற்சி வயிறு மற்றும் குடலைத் தூண்டுகிறது. இது செரிமான அமைப்பு வழியாக உணவை விரைவாக நகர்த்த உதவும். இது வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது.
உணவுக்குப் பிறகு நடப்பது இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும். உயர் இரத்த அழுத்தம் இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படுவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும், எனவே உயர் இரத்த அழுத்தத்தைக் குறைப்பதற்கு சாப்பிட்ட பின் 10 நிமிடம் நடப்பது நல்லது.
சாப்பிட்ட பிறகு நடப்பது எடையைக் குறைக்க உதவும். எடை குறைக்க நினைப்பவர்கள் சாப்பிட்டபின் நடைபயிற்சி செய்வதால் உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும், கொழுப்பிலிருந்து அதிக கலோரிகளையும் எரிக்கும்.
சாப்பிட்ட பிறகு நடப்பது உங்கள் மனநிலையை மேம்படுத்தும். உடலில் கார்டிசோல் போன்ற மன அழுத்த ஹார்மோன்களின் அளவைக் குறைக்க உடற்பயிற்சி உதவுகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |