வைட்டமின் டி ஊசி உடல் எடையை குறைக்குமா? பக்க விளைவுகளை தெரிஞ்சிக்கோங்க
பொதுவாக எலும்புகள் மற்றும் தசைகள் என்பவற்றை ஆரோக்கியமாக வைத்து கொள்ள வைட்டமின் சத்துக்கள் தேவைப்படுகின்றன.
இதன்படி, முக்கிய வைட்டமின்களின் ஒன்றான வைட்டமின் டி உறிஞ்சலுக்கு கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் கட்டயமானதாக இருக்கின்றன.
உடலில் ஏற்படும் வீக்கத்தை கட்டுபடுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதற்கு வைட்டமின் டி உதவியாக இருக்கின்றது.
அந்த வகையில் உடலில் ஏற்படும் சில மாற்றங்களுக்கு உதவுகின்ற வைட்டமின் டியை எப்படி பெறுவது? என பலருக்கும் சந்தேகம் இருக்கும்.
காலையில் சூரியன் ஒளியில் கிடைக்கும் வைட்டமின் டியை பெற முடியாதவர்கள் அதனை மாத்திரைகள் மூலமாகவோ அல்லது தடுப்பூசிகள் மூலமாகவோ உடலில் செலுத்திக் கொள்ள வேண்டும் என நினைப்பார்கள்.
இப்படியான சந்தேகங்கள் இருக்கும் பொழுது வைட்டமின் டி தடுப்பூசிகள் உடலில் ஏற்றிக் கொள்வது நல்லதா? கெட்டதா? என்பதனை தொடர்ந்து பார்க்கலாம்.
வைட்டமின் டி இலகுவாக பெறும் வழிகள்
1. சூரிய ஒளி
காலையில் உதிக்கும் சூரிய ஒளியில் உள்ள புற ஊதா கதிர்கள் மனிதர்களின் உடலில் படும்போது, சருமத்தில் உள்ள கொலஸ்ட்ரால் வைட்டமின் டி-யை உருவாக்கும். இதில் நீங்கள் இருக்கும் இடங்கள் சூரிய ஒளி படும் விதம் வைட்டமின் டியில் தாக்கம் செலுத்துகின்றது.
2. வைட்டமின் டி உள்ள உணவுகள்
- மீன்கள், முட்டையின் மஞ்சள் கரு,
- கல்லீரல், காளான்,
- பால், சீஸ், யோகர்ட்,
- ஆரஞ்சு ஜூஸ், பருப்புகள்
வைட்டமின் டி ஊசி
தீவிர வைட்டமின் டி குறைபாடு பிரச்சினையுள்ளவர்கள் அதனை உணவில் இருந்து பெற முடியாத போது மருத்துவர்கள் தடுப்பூசிகள் மூலம் எடுத்து கொள்ளுமாறு பரிந்துரைப்பார்கள். இது நேரடியாக இரத்தத்தில் கலக்குகின்றன.
இதன்படி, சூரிய ஒளியிலிருந்து நமது சருமம் உற்பத்தி செய்யும் வைட்டமின் டி3 தான் இந்த ஊசியிலும் பயன்படுத்தப்படுகிறது.
பலன்கள்
1. எலும்பு ஆரோக்கியத்தை வலுப்படுத்தி எலும்புப்புரை மற்றும் எலும்புருக்கி நோய் ஏற்படாமல் பாதுகாக்கும்.
2. வயதானவர்கள் கீழே விழும் போது அவர்களுக்கு எலும்பு முறிவு ஏற்படாமல் தடுக்கிறது.
3. தசைகள் வலுப்பெறும்.
4. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். தொற்றுக்கள் பரவுவது குறையும்.
5. மன அழுத்தம் குறையும். மனநலனை ஆரோக்கியமாக இருக்கும்.
6. டயாபடீஸ், இதய நோய்கள் மற்றும் சில புற்றுநோய் வராமல் தடுக்கும்.
பக்க விளைவு
1. தடுப்பூசி ஏற்றி இடங்களில் வீக்கம்,வலி, ரத்த கசிவு ஏற்படும்.
2. அரிப்பு, எரிச்சல், அல்லது மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது.
3. காய்ச்சல், நடுக்கம் ஏற்படலாம்.
4. ரத்தத்தில் கல்சியம் அளவு அதிகரித்து ஹைபர்கால்சீமியா உண்டாகும் போது இதய பிரச்னைகள், சிறுநீரகத்தில் கற்கள், குமட்டல், வாந்தி, மலச்சிக்கல், குழப்பம் போன்றவை ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |