தூக்கியெறியும் வாழைப்பழ தேலில் இவ்வளவு நன்மைகளா? இனிமேல் வேஸ்ட் பண்ணாதீங்க
பொதுவாகவே மலிவான விலையில் கிடைக்கக்கூடிய பழம் என்றால் அது வாழைப்பழம் என்று சொல்லலாம். வாழைப்பழம் எல்லா காலங்களிலும் கிடைக்கக்கூடிய ஒன்று. வாழைப்பழத்தில் உடலுக்கு தேவையான பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
மேலும், வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சினையிலிருந்து விடுபடலாம். நாம் எல்லோரும் வாழைப்பழத்தை சாப்பிட்டுவிட்டு அதன் தோலை தூக்கி எறிந்து விடுவோம்.
ஆனால், நாம் தூக்கி எறியும் வாழைப்பழத்தின் தோலில் எவ்வளவு நன்மைகள் இருக்கு தெரியுமா? அதை தெரிந்து கொண்டால், இனி வாழைப்பழ தோலை ஒருபோதும் குப்பையில் போட மாட்டீர்கள்.வாழைப்பழ தோலில் இருக்கும் நன்மைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
வாழைப்பழத் தோலின் பயன்கள்
வாழைப்பழத் தோலை அப்படியே முகத்தில் தடவி வந்தால், கரும்புள்ளிகள் பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும்.
வாழைப்பழத்தோலில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பாலிபினால்கள் உள்ளன, அவை உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்ற உதவும்.
இதனுடன் வாழைப்பழத்தோலில் உள்ள பொட்டாசியம் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. தழும்புகளைக் குறைக்கிறது.
வாழைப்பழத்தோல் உங்கள் சருமத்தில் உள்ள கறைகளை நீக்கும். வாழைப்பழத் தோல்களில் பொட்டாசியம் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன.
அவை தோல் துளைகளைத் திறக்கின்றன.
ஆக்ஸிஜனை உள்ளே செல்ல அனுமதிக்கின்றன மற்றும் குணப்படுத்த உதவுகின்றன. இது உங்கள் முகத்தில் உள்ள கறைகளைப் போக்க உதவுகிறது.
முகத்தில் பருக்கள் இருந்தால் சருக அழகு பாதிக்கப்படும்.
அப்படிப்பட்டவர்கள் வாழைப்பழத் தோலை பருக்கள் மீது தடவினால் முகம் பொலிவடையும். இது முகத்தை சுத்தப்படுத்தவும். அழுக்குகளை குறைக்கவும் உதவுகிறது. இரவில் தூக்கம் இல்லாமல் தவிப்பவர்களுக்கும், இரவில் நீண்ட நேரம் படிப்பவர்களுக்கும் கண்களை சுற்றி கருவளையம் ஏற்படும்.
அப்படிப்பட்டவர்கள் வாழைப்பழத்தோளை, கற்றாழை ஜெல்லுடன் சேர்த்து தடவி வந்தால் நாளடைவில் கண்களை சுற்றி இருந்த கருவளையம் மாயமாக மறையும் முகத்தில் அதிக சுருக்கங்கள் இருந்தால், இந்த வாழைப்பழ தோலை பயன்படுத்தலாம்.
வாழைப்பழத்தோல் சுருக்கங்களை நீக்கும். இது ஈரப்பதமூட்டும் பண்புகளைக் கொண்டுள்ளது, இது சருமத்தில் கொலாஜனை அதிகரிக்கிறது மற்றும் சருமத்தை இருக்கமாக்க உதவுகின்றது. இதன் காரணமாக சுருக்கங்கள் குறைக்கப்படுகின்றன.
இரவில் தூக்கம் இல்லாமல் தவிப்பவர்களுக்கும், இரவில் நீண்ட நேரம் படிப்பவர்களுக்கும் கண்களை சுற்றி கருவளையம் ஏற்படும். அப்படிப்பட்டவர்கள் வாழைப்பழத்தோலை கற்றாழை ஜெல்லுடன் சேர்த்து தடவி வந்தால் நாளடைவில் கண்களை சுற்றி இருந்த கருவளையம் மாயமாக மறையும்.
என்றும் இளமையாக இருக்க விரும்புபவர்கள் வாழைப்பழ தோலை வாரம் இரண்டு முறை முகத்தில் தடவி மசாஜ் செய்துவந்தால் முகம் என்றும் இளமையான தோற்றத்துடன் இருக்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |