கர்ப்பப்பை வலுப்படுத்தும் உளுந்தங்களி- தினமும் சாப்பிட்டால் இவ்வளவு பலன்களா?
உளுந்தங்களி சாப்பிடுவதால் நம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் கிடைக்கின்றன.
அதாவது உளுந்தங்களி சாப்பிடுவதால் புரதம், கொழுப்பு, வைட்டமின் B மற்றும் கார்போஹைடிரேட் உள்ளிட்ட சத்துக்கள் கிடைக்கின்றன.
மேலும் பெண்களுக்கு தேவையான இரும்புச்சத்து, கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம் ஆகியவற்றை தந்து இடுப்பு எலும்புகளை வலுப்படுத்த உதவுகின்றது.
அந்த வகையில் உளுந்தங்களி சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள் என்பதனை தொடர்ந்து பார்க்கலாம்.
உளுந்தங்களி
1. வயதிற்கு வந்த இளம் பெண்களின் கர்ப்பப்பை வலுப்படுத்துவதற்கு வேலையை உளுந்தங்களி செய்கிறது.
2. கர்ப்பமாக இருக்கும் தாய்மார்கள் உளுந்து களி அடிக்கடி சாப்பிடுவார்கள். இதனால் அவர்களின் உடலில் உள்ள இரும்புச்சத்து அதிகரிக்கும். அத்துடன் தாய்க்கும், சேய்க்கும் நோயெதிர்ப்பு திறனை அதிகமாகும். பால் கொடுக்கும் தாய்மார்கள் உளுந்தங்களி சாப்பிட்டால் தாய்பால் அதிகமாக சுரக்கும்.
3. பெண்களின் மாதவிடாய் பிரச்சனைகள் உள்ள பெண்கள் மாதவிடாய் காலங்களில் உளுந்தங்களி செய்து சாப்பிடலாம். இது இரும்புச்சத்து, கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம் ஆகிய ஊட்டச்சத்துக்களை பெருகச் செய்யும்.
4. உளுந்தில் உள்ள பொட்டாசியம் நரம்பு மண்டலம் வலிமை பெற உதவுகின்றது.
5. தொடர் வயிற்று போக்கு பிரச்சினையால் அவஸ்தைப்படுபவர்கள் உளுந்து களியை சாப்பிடலாம். இந்த உணவு வயிற்று போக்கை நிறுத்தி, உடலுக்கு பலத்தை தருகிறது. அத்துடன் மலச்சிக்கல் பிரச்சினையுள்ளவர்களும் சாப்பிடலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |