ஒரே வாரத்தில் இயற்கையாக சிவப்பழகு பெற: இத மட்டும் பண்ணுங்க
பொதுவாகவே அனைவரின் வீட்டிலும் பயன்படுத்தப்படும் பொருள் தான் மஞ்சள், ஆனால் நம்மில் பலரும் அறியாத அளப்பரிய மருத்துவ குணங்கள் மஞ்சளில் நிறைந்துள்ளது.
மஞ்சள் உடலுக்கு உள்ளேயும், வெளியேயும் செயல்பட்டு நமக்கு பல்வேறு நன்மைகளை அளிக்கின்றது.
மஞ்சள் சரும அழகை மேம்படுத்துவதற்கு எவ்வாறு துணைப்புரிகின்றது என இந்த பதிவில் பார்க்கலாம்.
கருமையான சருமத்தை கொண்டவர்கள்...
சூரிய ஒளியினால் ஒரு சிலருக்கு முகம் இயற்கை பொலிவினை இழந்து கருத்து காணப்படும். இப்படி கருமையான சருமத்தை கொண்டவர்கள் கஸ்தூரி மஞ்சளை தயிரில் கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் காயவிட்டு குளிர்ந்த நீரில் கழுவினால் முகம் இழந்த பொழிவை மீண்டும் பெறும்.
இவ்வாறு தொடர்ச்சியாக ஒரு வாரம் பயன்படுத்தினால் முகம் இயற்கையாக சிவப்பழகு பெறுவதை கண்கூடாக அவதானிக்க முடியும்.
முகப்பருக்களுக்கு...
இளம் பருவத்தில் முகப்பருக்கள் மிகப்பெரும் பிரச்சினையாக காணப்படுகின்றது. இதற்கு கஸ்தூரி மஞ்சளை பயன்னபடுத்தி தினசரி முகம் கழுவினால் முகப்பருக்கள் வருவது தவிர்க்கப்படுவதுடன் ஏற்கனவே காணப்படும் முகப்பருவின் வடுக்களும் மறைய ஆரம்பிக்கும்.
அலர்ஜி எதிர்ப்பு தன்மை அதிகம் நிறைந்துள்ள இந்த கஸ்தூரி மஞ்சளுடன் பால் சேர்த்து கலந்தும் பயன்படுத்தலாம். இது கருமையை போக்க பெரிதும் பயனுள்ளதாக இருக்கும்.
உதட்டில் உள்ள கருமையை போகக் மஞ்சள் மற்றும் எலுமிச்சை சாறுடன் சிறிதளவு சர்க்கரை கலந்து உதட்டில் தடவி மசாஜ் செய்து வர சிவந்த உதடுகளை பெற முடியும்.
எல்லா விதமான சரும பிரச்சினைகளையும் சரி செய்யக்கூடிய இந்த அற்புதமான குறிப்பை வாரம் ஒருமுறை நீங்கள் பயன்படுத்தி வரலாம்.
முகப் பருக்கள் அதிகமாக இருப்பவர்கள் இதை பயன்படுத்துவதால் எளிதாக அதிலிருந்து விடுபட முடியும். எந்த விதமான பக்க விளைவுகளும் இன்றி முகப்பருக்களை கட்டுப்படுத்த கஸ்தூரி மஞ்சள் சிறந்த தீர்வாக அமையும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |