புற்றுநோய்க்கு எதிராக செயற்படும் மஞ்சள் : மஞ்சள் தாலிக்கு இதுதான் காரணமா?
பொதுவாகவே அனைவரின் சமையல் அறையிலும் இருக்கும் முக்கியமான பொருட்களுள் ஒன்றுதான் மஞ்சள்.
தழிழர்களை பொருத்தவரையில் மிகவும் மங்கலகரமான ஒரு பொருளாக திகழ்கிறது. உண்மையில் மஞ்சளை நமது முன்னோர்கள் முதன்மைப்படுத்தி வைத்தமைக்கு முக்கியமான காரணங்கள் இருக்கின்றது.
மஞ்சளை நாம் அனைவரும் உணவில் பயன்படுத்துகின்றோம் ஆனால் இன்னும் நம்மில் பலருக்கும் இதன் மருத்துவ குணங்கள் குறித்தும் இதன் பயன்கள் குறித்தும் பூரண தெளிவின்மையே கணப்படுகின்றது.
மஞ்சள் உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிப்பதற்கு காரணம் என்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
மஞ்சளின் அலப்பரிய பயன்கள்
மஞ்சள் ஒரு இயற்கை என்டிபயோட்டிக் நமது முன்னோர்கள் குளிப்பதில் தொடங்கி வாசலில் தெளிப்பது வரை மஞ்சளை பயன்படுத்தியமைக்கு இதுவே காரணம்.
புற்று நோய்க்கு எதிரானது மஞ்சள் குறிப்பாக மார்பக புற்று நோய் வராமல் தடுப்பதில் முக்கிய பங்கு உள்ளது. இதனால் தான் ஆரம்ப காலத்தில் மஞ்சளை தாலியாக கட்டும் வழக்கம் காணப்பட்டது.
தாலியை தங்கத்தில் அணிந்தாலும் அதனை மஞ்சள் கயிற்றில் கட்ட வேண்டும் என்பதற்கும் இதுவே காரணம். இதனை புரிந்துக்கொள்ளாத பலரும் இன்று தங்க தாலிக்கொடிகளில் தாலியை அணிந்துக் கொண்டு தங்களின் அறியாமையை கௌரவமாக நினைக்கும் அவல நிலையே காணப்படுகின்றது.
மேலும் மஞ்சள் இதய நோய் அபாயத்தைக் குறைக்கிறது. வீக்கம் மற்றும் ஆக்சிஜனேற்றத்தைக் குறைக்க உதவும். மஞ்சள் இதய நோய் செயல்முறையை மாற்றியமைக்க உதவும் என்று ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.
கொழுப்பின் அளவை குறைக்க நினைப்பவர்கள் மஞ்சள் பயன்படுத்துவது நல்லது. ஏனெனில் மஞ்சளில் குர்குமின் வேதிப்பொருள் இருப்பதால், இது எல்.டி.எல் கொழுப்பைக் குறைத்து அதன் ஆக்சிஜனேற்றத்தைத் தடுக்கிறது.
உங்களுக்கு மனச்சோர்வு இருந்தால், மூளையில் இருந்து பெறப்பட்ட நியூரோட்ரோபிக் காரணி (BDNF) எனப்படும் புரதம் குறைந்து, கற்றல் மற்றும் நினைவாற்றலுக்கு உதவும் உங்கள் ஹிப்போகாம்பஸ் சுருங்கத் தொடங்குகிறது.
மனச்சோர்வின் அறிகுறிகளைக் குறைப்பதில் குர்குமின் ஃப்ளூக்ஸெடின் (ப்ரோசாக்) போலவே பயனுள்ளதாக இருந்தது என்று மற்றொரு ஆய்வு காட்டுகிறது.
குர்குமின் செரோடோனின் மற்றும் டோபமைன் அளவை அதிகரிக்கலாம் - இவை உங்கள் மூளையில் உள்ள இரசாயனங்கள் மனநிலை மற்றும் பிற உடல் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துகின்றன.
பெருங்குடல் புற்றுநோயை மையமாகக் கொண்ட ஒரு ஆய்வில், ஆண்களில் பெருங்குடலில் ஏற்படும் புண்களின் எண்ணிக்கை 40% குறைந்துள்ளது.
மருத்துவர்கள் பொதுவாக 500 மில்லிகிராம் குர்குமின் தினமும் இரண்டு முறை உணவுடன் எடுத்துக் கொள்ள பரிந்துரைக்கிறார்கள், உங்களுக்கு சரியான அளவு உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தைப் பொறுத்தது.இந்த நன்மைகள் பல அதன் முக்கிய செயலில் உள்ள பொருளான குர்குமினிலிருந்து வருகின்றன.
மஞ்சள் எனப்படும் மசாலா, தற்போதுள்ள மிகவும் பயனுள்ள ஊட்டச்சத்து நிரப்பியாக இருக்கலாம். பல உயர்தர ஆய்வுகள் மஞ்சள் உங்கள் உடல் மற்றும் மூளைக்கு முக்கிய நன்மைகள் தரக்கூடியது.
மேலும் மஞ்சளில் அதிகமாக நேர்மறை சக்திகளை ஈர்க்கக் கூடிய ஆற்றல் இருக்கின்றது. இதனால் மஞ்சளை வீட்டில் தினசரி பூஜைகளில் பயன்படுத்துவது மனதுக்கும் சிறந்த பலனை கொடுக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |