இரவு சாப்பாட்டை 7 மணிக்கு முதல் சாப்பிடணுமா? மருத்துவ விளக்கம்
பொதுவாக இரவு சாப்பாட்டை தாமதமாக சாப்பிடும் போது உடல் நலத்திற்கு கேடு வருதாக கூறப்படுகின்றது.
இரவு 7 மணி துவக்கம் 8 மணிக்குள் இரவு வேளை சாப்பாட்டை முடித்து விடுவது சிறந்தது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
ஏனெனின் தாமதமாக சாப்பிடுவதால் அதிக எடை, தூக்கம் இன்மை இப்படியான பிரச்சினைகள் வரும்.
சாப்பாட்டை அந்தந்த வேளைகளில் சாப்பிடுவதால் எடை அதிகரிக்காமலும் நோய்கள் இல்லாமலும் பார்த்து கொள்ளலாம்.
இப்படி என்னென்ன நன்மைகளை எமக்கு தருகின்றது என்பதனை தொடர்ந்து பார்க்கலாம்.
இரவு சாப்பாட்டின் விளைவுகள்
1. நாள் முழுவதும் இருக்கும் சோர்வு நேரத்திற்கு சாப்பிட்டு பழகிய பின்னர் இருக்காது.
2. காலையில் எழுந்தவுடன் புத்துணர்ச்சி கிடைக்கும். சோர்வு, மயக்கம் இப்படியான பிரச்சினைகள் வருவது குறைவாக இருக்கும்.
3. மன அழுத்தத்தை போக்கும் ஹார்மோன் சுரப்பது சீரடைந்து ஆற்றல் அதிகரிக்கும். அத்துடன் செரிமானம் சரியாக நடந்து இரவு முழுவதும் சமிபாட்டு தொகுதி ஓய்வாக இருக்கும்.
4. அமில வீச்சு அல்லது அஜீரணம் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவது குறைவாக இருக்கும்.
5. இதய ஆரோக்கியம் சீராக பேணப்படும்.
6. இரவு சீக்கிரமாக சாப்பிடுவதால் உடலில் கொழுப்பு சேராது. இதனால் உடல் எடை கட்டுக்குள் இருக்கும்
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |