பேரீச்சம்பழத்தை பாலில் ஊறவைத்து சாப்பிடுவதனால் உண்டாகும் நன்மைகள் என்ன தெரியுமாா?
Dates
Milk
By Kishanthini
பேரிச்சம்பழத்தை பாலுடன் சேர்த்து கலந்து குடிக்கும் பொழுது அது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை நம்முடைய உடலுக்கு தருகிறது
பாலில் கால்சியம் சத்து நிரம்பியுள்ளது. இது நமது உடலுக்கு தேவையான ஆற்றலையும், பலத்தையும் வழங்கும்.
அதைப்பபோல் இரும்புச் சத்து பேரிச்சையில் உள்ள முக்கிய ஊட்டச்சத்து ஆகும். இரும்புச் சத்து இரத்த சிவப்பணுக்களில் உள்ள புரதமான ஹீமோகுளோபினின் உற்பத்திக்கு இன்றியமையாதது.
அந்தவகையில் பேரீச்சம்பழத்தை பாலில் ஊறவைத்து குடிப்பதனால் கிடைக்ம் நன்மைகள் என்ன என்பதை பார்ப்போம்.

- பசும் பாலில் ஊறவைத்த பேரிச்சம் பழத்தை கர்ப்பிணி பெண்கள் எடுத்துக் கொண்டால், அது அவர்களுக்கு மட்டுமின்றி, கருவில் வளரும் குழந்தைக்கும் ஏராளமான சுகாதார நன்மைகளை ஊக்குவிக்கின்றன.
- பேரிச்சம் பழம் மற்றும் பால் கலவையை தவறாமல் உட்கொள்வது கருவில் உள்ள குழந்தைக்கு உறுதியான எலும்புகள் மற்றும் அதிக அளவிலான ரத்தத்தை உருவாக்க வலி வகை செய்யும் என்று இது குறித்த ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.
- பாலில் ஊற வைத்த பேரிச்சையுடன் தேன் கலந்து, அதனை அரைத்து பேஸ்ட் போல் தயாரித்துக் கொள்ளவும். அந்த பேஸ்டை முகத்தில் பேக் போல இட்டுக் கொண்டு பதினைந்து முதல் இருபது நிமிடங்கள் வரை அப்படியே விடவும். வாரத்திற்கு ஒரு முறை இந்த பேஸ்பேக் செய்து போட்டுக் கொண்டால் முக சுருக்கம் நீங்கி இளமையாக காட்சியளிப்பீர்கள்.
- பாலில் ஊற வைத்த பேரிச்சை ஊட்டச்சத்து நிறைந்த மற்றும் அடர்த்தியான உணவாக செயல்பட்டு உங்களின் ஆற்றல் அளவை அதிகரிக்கும்.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US