குளிப்பதற்கு சிறந்த நேரம் காலையா? இரவா?
பொதுவாக உடலை புத்துணர்ச்சியாக வைத்து கொள்வதற்கும், சுகாதாரமாக வாழ்வதற்காகவும் குளியல் மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
பலர் அன்றைய நாளை ஒரு குளியலுடன் தான் ஆரம்பிப்பார்கள். சிலர் இதற்கு முற்றிலும் நேர்மாறாக இரவு தூங்கும் முன் குளிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர்.
இப்படி இரண்டு வேளைகளில் குளிப்பதால் உடலுக்கு தனித்தனி நன்மைகள் கிடைப்பதாக கூறப்படுகிறது.
மாறாக எந்த நேரத்தில் குளிப்பது அதிகபட்ச நன்மைகளை அளிக்கிறது என்பது பலருக்கும் சந்தேகமாகவே இருந்து வருகிறது.
அந்த வகையில் குளிப்பதற்கு எது சிறந்த நேரம்? என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
இரவு நேர குளியல்
பொதுவாக இரவில் நன்றாக தூங்குவதற்காக சிலர் இரவு நேர குளியலை விரும்புவார்கள்.
நிபுணர்களின் கூற்றுப்படி, படுக்கைக்கு முன் குளிப்பது சரும பிரச்சினைகளிலிருந்து எமக்கு பாதுகாப்பு கொடுக்கும். அதிலும் கோடைக்காலங்களில் இவ்வாறு இரவில் குளிப்பது சிறந்தது.
காலையிலிருந்து நீண்ட நேரம் வியர்வை, தூசியில் இருந்து விட்டு குளிக்காமல் அப்படியே தூங்கும் பொழுது நிம்மதியான தூக்கம் கிடைக்காது.
ஒவ்வாமை பிரச்சினைகள் வராமல் கூட தடுக்கலாம், எனவே உடலை சுத்தமாக வைத்து கொள்வது அவசியம்.
காலை நேர குளியல்
காலையில் எழுந்தவுடன் குளித்து விட்டு அன்றைய நாளை துவங்கினால் நாளே புத்துணர்ச்சியாக இருக்கும்.
படுக்கையிலிருந்து எம்முடன் தொடரும் சோம்பல் குளியலின் பின் இருக்காது. வேலைக்கு செல்பவர்கள் குளித்தால் தான் அவர்களுக்கு வேலைக்கு செல்வதற்கான யோசணையே வரும்.
மனிதர்களின் உடலில் இருக்கும் சர்க்காடியன் ரிதம் இயற்கையான வெப்பநிலையை அதிகரிக்கும். அதிலும் குறிப்பாக ஜிம் செல்பவராக இருந்தால் உடற்பயிற்சி முடித்த பின்னர் கண்டிப்பாக குளிக்க வேண்டும்.
குளிக்காவிட்டால் வெப்பநிலை வழமைக்கு திரும்பாது. ஆகவே காலையில் குளிப்பது உங்களும் சுற்றத்தாருக்கும் நன்மையளிக்கும். ஆனால் இரவில் குளிப்பதையும் மறக்காதீர்கள்.
எந்த நேர குளியல் சிறந்தது?
இப்படியொரு கேள்வி உங்கள் மனத்திற்குள் வந்தால் நிச்சயம் அது இரவு நேர குளியல் தான்.
நிம்மதியான தூக்கம், சரும பாதிப்பு, அடுத்த நாளை நன்றாக தயார்ப்படுத்துவதற்கான அடிப்படையான விடயத்தை இரவு நேர குளியல் தயார் செய்கிறது.
அத்துடன் கார்டிசோல் ஹார்மோன் அளவை சமநிலைப்படுத்துவதன் மூலம் தோல் அழற்சியின் வாய்ப்புகளையும் குறைக்கிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |