கொரியன் பெண்களைப் போன்று கண்ணாடி முகம் வேண்டுமா? அசத்தல் டிப்ஸ் இதோ
கொரியன் நாட்டு பெண்களைப் போன்று கண்ணாடி முகத்தினை பெறுவதற்கு அரிசி மாவு எவ்வாறு உதவுகின்றது என்பதை தெரிந்து கொள்வோம்.
அரிசி கழுவிய நீர் சருமத்தை பாதுகாக்கும் என்று கேள்விப்பட்ட நமக்கு, தற்போது அரிசி மாவும் சருமத்தில் அற்புதங்களை செய்யும் என்பது தெரியவந்துள்ளது.
அரிசி மாவில் ஃபேஸ் பேக்
3 ஸ்பூன் அரிசி மாவை எடுத்துக்கொண்டு, அதில் தயிர் மற்றும் காய்ச்சாத பால் ஆகியவற்றை சேர்த்து நன்றாக பேஸ்ட் போன்று கலந்து முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவி, லேசான மசாஜ் செய்யவும். சுமார் 30 நிமிடங்களுக்கு பின்பு வெதுவெதுப்பான நீரில் கழுவிக்கொள்ளவும்.
நன்மைகள்:
முகத்திலுள்ள இறந்த செல்கள் வெளியேற்றப்படுவதுடன், அழுக்குகளும் நீங்குகின்றது. இந்த பேக்கை வாரம் இரண்மு முறை பயன்படுத்தவும்.
கோடை காலத்தில் ஏற்படும் வியர்க்குரு, அரிப்பு, தடுப்பு, உஷ்ண கட்டிகள் இவற்றிற்கு சிறந்த தீர்வு கொடுக்கின்றது. அதாவது அரிசி மாவை சிறிதளவு தண்ணீரில் கலந்து அதனை ஐஸ் கியூப்பாக ஃபிரிட்ஜில் ஊற்றி வைக்கவும். பின்பு மாவு ஐஸ் கட்டியான பின்பு சருமத்தில் அரிப்பு இருக்கும் இடத்தில் ஒத்தடம் கொடுத்தால் சரும பிரச்சினை நீங்கும்.
கரும்புள்ளிகளால் அவதிப்படுகிறவர்கள், அரிசி மாவுடன் சர்க்கரை கலந்து அதனை முகத்தில் தடவி மசாஜ் செய்யவும். பின்பு சிறிது நேரம் கழித்து கழுவினால் முகம் பிரகாசமாக மாறுவதுடன், மூக்கை சுற்றியுள்ள கரும்புள்ளிகள் அனைத்தும் மறையும்.
பிரசவத்தினாலும், உடல் எடை அதிகரித்து குறையும் போது உண்டாகும் தழும்புகளை சரிசெய்ய அரிசி மாவு பயன்படுகின்றது. அதாவது அரிசி மாவுடுன், மஞ்சள் தூள், காய்ச்சாத பால் இவற்றினை கலந்து பேஸ்ட் போன்று ஆக்கிக்கொள்ளவும். பின்பு இதனை முகத்தில் தடவி 30 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவினால் நல்ல பலன் கிடைக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |