செஸ் விளையாட்டு புத்திசாலிகளின் விளையாட்டாக பார்க்கப்படுவது ஏன்? காரணத்தை தெரிஞ்சிக்கோங்க
பொதுவாக பிறக்கும் போது ஒவ்வொரு மனிதனுக்கும் மூளை இருக்கும் ஆனால் அறிவு இருக்காது. அறிவு என்பது கூடவே பிறக்கும் விடயம் கிடையாது அது சொந்த முயற்சியின் விளைவாக மாத்திரமே பெற கூடிய ஒரு ஆற்றல் எனறே கூற வேண்டும்.
நாம் கற்றுக்கொள்ளும் விடயங்கள், நாம் வாழும் சூழல் ஆகியவையே நாம் எப்படிப்பட்ட மனிதர் என்பதை தீர்மானிக்கும். அந்த வகையில் செஸ் விளையாட்டு புத்திசாலிகளின் விளையாட்டாக பார்க்கப்படுவது ஏன்? இது தொடர்பில் இந்த பதிவில் பார்க்கலாம்.
அறிவியல் என்ன சொல்கின்றது?
புத்திசாலியாக இருப்பவர்களால் மட்டுமே செஸ் விளையாட முடியும் என்ற தவறான கருத்து தற்காலத்திலும் நம்மில் பலரிடம் காணப்படுகின்றது. செஸ் விளையாடினால், நமது நுண்ணறிவு திறன் எனப்படும் IQ (Intelligence Quotient) அதிகமாகிறது.
இதனால், நினைவாற்றல் அதிகரித்து, நம்மை பல விஷயங்களை நினைவில் வைத்துக்கொள்ள இது துணைப்புரிகின்றது. அது மட்டுமன்றி, செஸ் விளையாடினால் நாம் யோசிக்கும் திறனிலும் மாற்றம் ஏற்படும் என்பது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்ட உண்மை.
செஸ் விளையாட்டினை விளையாடுவதால் நமது மூளைக்கு சிறந்த பயிற்சி கிடைக்கின்றது. உடல் சீராக இயங்குவதற்கு எப்படி உடற்பயிற்சி முக்கியமாகின்றதோ அதுபோல் மூளை சீராக செயற்படுவதற்கும் பயிற்சி அவசியமாகின்றது.
நன்றாக சதுரங்கம் விளையாட தெரிந்தவர்களுக்கு வலுவான நினைவாற்றல் திறன் உள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக, விளையாட்டு நகர்வுகளின் பல சேர்க்கைகள் மற்றும் அவற்றின் சாத்தியமான விளைவுகளை தெரிந்து வைத்துக்கொண்டால்தான் நன்றாக செஸ் விளையாட முடியும்.
செஸ் விளையாடுபவர்கள், தாங்கள் எங்கோ, எப்போதோ கேட்ட விஷயங்களை கூட நினைவில் வைத்துக்கொண்டிருப்பர். அதை தேவைப்படும் இடங்களில் பயன்படுத்திக்கொள்வர். இது அவர்களுக்கே தெரியாமல் அவர்களுக்குள் ஏற்படும் மாற்றமாகும்.
டிமன்ஷியா என்பது மறதி நோய் ஆகும். 2019ஆம் ஆண்டில் அமெர்க்க பல்கலைக்கழகம் ஒரு மருத்துவ ஆராய்ச்சியை நடத்தியது. அதில், செஸ் விளையாடுபவர்களிடம் இருக்கும் நினைவாற்றல் அவர்களை டிமன்ஷியா பாதிப்பில் இருந்து காப்பாற்றுகிறது என்பது தெரிய வந்துள்ளது.
இதற்கு காரணம், செஸ் விளையாட்டில் நினைவாற்றல், கணக்கு போடும் திறன், காட்சி-இடஞ்சார்ந்த திறன்கள், க்ரிடிக்கல் திங்கிக்ங் போன்ற திறன்கள் இருக்கும். இதனால், செஸ் விளையாடும் வயதானவர்கள் மறதி நோய் வராமல் தப்பிக்கலாம்.
செஸ் விளையாடும் போது நமது இரண்டு பக்க மூளையும் வேலை செய்யும் என ஜெர்மன் நாட்டில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. செஸ்ஸில் இரண்டு பக்கமாக விளையாட வேண்டும்.
எதிராளியை தோற்கடிக்க வேண்டும் என யோசிக்கும் அதே நேரத்தில், நம் ராஜாவை எப்படி காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்ற யோசனையும் நமக்கு இருக்க வேண்டும். அப்போது நமது இரண்டு பக்க மூளையும் செயல்படுவதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் மூளைக்கு கொடுக்கப்படும் சிறந்த பயிற்சியாக செஸ் விளையாட்டு பார்க்கப்படுகின்றது. புத்திசாலிகள் செஸ் விளையாடுகின்றார்கள் என்பதில் உண்மை இல்லை மாறாக செஸ் விளையாடுபவர்கள் புத்திசாலிகளாக ஆகின்றார்கள் என்பதே மெய்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |