கண் திருஷ்டி நீங்கி செல்வம் பெருக வேண்டுமா? உருளியை இந்த முறையில் வைங்க
வீடு மற்றும் கடைகளில் வைக்கப்படும் உருளியை எவ்வாறு வைக்க வேண்டும் என்பதையும் அதன் நன்மைகள் என்ன என்பதையும் தெரிந்து கொள்வோம்.
உருளியில் தண்ணீரை நிரப்பி அதில் மலர்களைப் போட்டு வீட்டு வாலில் வைத்தால் அதிகமான பலனை பெறலாம் என்ற நம்பிக்கை உள்ளது.
உருளியை வீட்டில் எந்த இடத்தில் வைக்கலாம்?
பொதுவாக உருளியை வீட்டின் முன் வாசலில் தென்மேற்கு மூலையில் வைக்க வேண்டும் என்று முன்னோர்கள் கூறுகின்றனர். இது வீட்டு அழகுக்காக மட்டுமல்ல, வீட்டில் நேர்மறை ஆற்றலைத் தரவும் செய்கின்றது.
வீட்டில் சண்டை சச்சரவு நீங்க உருளியை மண்ணில் வைக்க வேண்டும். மேலும் உருளியை பித்தலை, பஞ்சலோகம், பீங்கான், கண்ணாடியில் வைக்கலாம்.
ஆனால், எக்காரணம் கொண்டும் எவர்சில்வர், பிளேஸ்டிக், அலுமினியம், இரும்பு ஆகியவற்றில் உருளியை வைக்கவே கூடாது.
உருளியை நீங்கள் வீட்டின் நுழைவாயிலின் வலதுபுறத்திலோ அல்லது இடதுப்புறத்திலோ வைக்கலாம். மேலும் வீட்டின் ஹாலிலும் வைக்கலாம்.
இதே போன்று தொழில் செய்யும் இடத்தில் உருளியை வைத்தால் நஷ்டம் ஏற்படாமல் வியாபாரம் பெருகும். மேலும் வீட்டில் எதிர்மறை ஆற்றல் நீங்கி நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும்.
எவ்வாறு வைக்க வேண்டும்?
நீங்கள் வீட்டிலோ அல்லது கடைகளிலோ உருளியை வைக்கும் போது அதில் நல்ல சுத்தமான தண்ணீரை ஊற்றி மஞ்சள் பச்சை கற்பூரம் வாசனை திரவியமான ஜவ்வாது வெட்டிவேர் ஆகியவற்றை சேர்க்கலாம்.
உருளியில் பூக்கள் வைக்கும் போது நல்ல நறுமணம் உடைய பூக்களை வைக்க வேண்டும். இல்லை என்றால் மருத்துவ குணம் உள்ள பூக்களை வைக்கலாம்.
உதாரணமாக, உருளியில் நீங்கள் தாமரைப் பூ, சாமந்திப்பூ, ரோஜா பூ, மல்லி பூ போன்ற மலர்களை வைக்கலாம். ஆனால் எக்காரணம் கொண்டும் செவ்வரளி பூவை உருளியில் வைக்கவே கூடாது. ஏனெனில், இது வீட்டில் நஷ்டத்தை கொண்டு வரும்.
அதுபோல உருளியில் இருக்கும் நீரை தினமும் மாற்ற வேண்டும். அப்படி, செய்ய முடியாதவர்கள் இரண்டு நாளைக்கு ஒரு முறையாவது மாற்றுவது மிகவும் நல்லது.
வீட்டில் உருளை வைப்பதால் கிடைக்கும் நன்மைகள்:
வீட்டில் உருளி வைப்பதால் பல நன்மைகள் கிடைக்கும். உதாரணமாக, வீட்டிற்கு வருபவர்களின் பார்வை முதலில் உருளி மீது பட்டால் வீட்டில் கண் திருஷ்டி ஏற்படாது என்று முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
அதுமட்டுமின்றி, உருளியை வீட்டில் வைப்பதால், வீட்டில் மனநிம்மதி, செல்வ வளம் செழிக்கும் என்பது நம்பிக்கை.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |