Baakiyalakshmi: ராதிகாவின் கருவை கலைக்க கூறும் ஈஸ்வரி! எதிர்பாராத பயங்கர திருப்பம்
பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா கர்ப்பத்தை கலைக்க ஈஸ்வரி கூறியுள்ளதையடுத்து ராதிகா சரமரியாக சண்டையிட்டுள்ளார்.
பாக்கியலட்சுமி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கிலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், டிஆர்பி-யிலும் முன்னணியில் இருந்து வருகின்றது.
பாக்கியாவை வேண்டாம் என்று விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை திருமணம் செய்து தனியாக இருந்து வந்த நிலையில் தற்போது பாக்கியாவின் வீட்டிற்கே வந்து வசித்து வருகின்றார்.
எந்தவொரு பிரச்சினை என்றாலும் அதனை மிகவும் சாமர்த்தியமாக சரி செய்த பாக்கியா தனது தொழிலும் சாதித்து வருகின்றார்.
தற்போது ராதிகா கர்ப்பமாக உள்ள நிலையில், இது பாக்கியாவிற்கு தெரிந்துள்ளது. ராதிகாவின் கர்ப்பத்தினை ஒருவழியாக ஈஸ்வரியிடமும் கூறியுள்ளார்.
அதிர்ச்சியில் வீட்டிற்கு வந்த ஈஸ்வரி, 'இந்த குழந்தை வேண்டாம்' என்று ராதிகாவிடம் கூறிவிடுகிறார்.
ஆனால், ராதிகா 'இந்த குழந்தை வேண்டுமா வேண்டாமா என்ற முடிவை நான் தான் எடுப்பேன்' என கூற, கோபத்தின் உச்சத்திற்கு செல்கிறார் ஈஸ்வரி.
இவர்களுக்கு இடையே வழக்கம் போல் மாட்டிக்கொண்டு முழிக்கிறார் கோபி.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |