காலையில் வெதுவெதுப்பான நீரில் இந்த ஒரு பொருளை கலந்துகுடித்து வந்தால் போதும்! உடல்நல பிரச்சினையே வராதாம்;
அடிக்கடி உடல் நிலை சரியில்லாமல் போவதற்கு காரணமே நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பது தான். உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும்.
எனவே சமையல் அறையில் இருக்கும் பொருட்களை கொண்டே எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம். அந்த வகையில், கருப்பு மிளகு சிறந்த தீர்வை அளிக்கிறது.
ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் கருப்பு மிளகு தூளை கலந்து சுமார் ஒரு மாதம் குடித்து வர எண்ணற்ற உடல் நலப்பிரச்சினைகள் சரியாகிவிடுமாம்.
இவை, தினமும் மிளகு நீரை பருகி வந்தால், உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறிவிடும். தொடர்ந்து, செரிமானம் மேம்படும். வயிற்று பிரச்சினைகளும் சரியாகிவிடும்.
இந்த நீர் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு செல்களின் வளர்ச்சியையும் ஊக்குவிக்க உதவும். அதுமட்டுமின்றி பருவகால நோய் தாக்குதல்களில் இருந்து தற்காத்துக்கொள்ள உதவும்.

எனவே காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் பருகும் வழக்கத்தை வெதுவெதுப்பான நீருடன் கருப்பு மிளகு தூள் சேர்த்து பருகி வரலாம். நாள்பட்ட மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள் கண்டிப்பாக இந்த தண்ணீரை தினமும் பருக வேண்டும்.
தொடர்ந்து, சுவாச மண்டலத்தின் ஆரோக் கியத்தையும், மூட்டுகளின் ஆரோக்கியத்தையும் பராமரிக்க உதவும்.
கீல் வாதம், மூட்டு வலி, மலச் சிக்கல், சுவாசக் கோளாறு மற்றும் உடல் நலப் பிரச்சினைகள் உள்ளவர்கள் இந்த நீரை பருகுவது உடலுக்கு நல்லது.