எலுமிச்சை தோலை தூக்கி போட்டுருவீங்களா? இனி தவறை செய்யாதீங்க
கோடை காலம் என்றாலே அனைவரும் பிடித்த பானமாக மாறிவிடுவது எலுமிச்சை நீர். எடையைக் குறைப்பதிலும், செரிமான பிரச்சினையை சரி செய்வதிலும், உடம்பினை நீரேற்றமாக வைத்திருக்கவும் உதவுகின்றது.
ஆனால் எலுமிச்சையில் அதன் சாறை புளிந்துவிட்டு தோலை வெளியே தூக்கி போட்டுவிடுவோம். ஆனால் இந்த தோலிலும் பல நன்மைகள் இருப்பதை தற்போது தெரிந்து கொள்ளுங்கள்.
எலுமிச்சை தோலின் சத்துக்கள்
வைட்டமின்கள், நார்ச்சத்து, பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் கால்சியம் போன்ற முக்கியமான ஊட்டச்சத்துக்கள் எலுமிச்சை தோல்களில் காணப்படுகின்றன.
ஒரு சாதாரண அளவுள்ள எலுமிச்சை பழ தோலில், பொட்டாசியம் 160 மில்லி கிராம், வைட்டமின் சி 129 மில்லிகிராம், 10.6 கிராம் நார்ச்சத்து, வைட்டமின் ஏ சத்துக்களும் அடங்கியுள்ளது.
தோலின் நன்மைகள் என்ன?
இதன் தோல்களில் தயாரிக்கப்படும் ஊறுகாய் சரும புற்று நோய் மற்றும் பெருங்குடல் மற்றும் மார்பகப் புற்றுநோய் வராமல் தவிர்க்கின்றது.
ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உடலுக்கு உட்புறமும், வெளிப்புறமும் நன்மையை கொடுக்கும்.
இதில் இருக்கும் பொட்டாசியம், ரத்தக்குழாய்ச் சுவர்களைத் தளர்வாக்கி, ரத்த அழுத்தத்தைச் சீராகவும், இதயத்தினை ஆரோக்கியமாகவும் வைக்கின்றது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன், பற்கள் தொடர்பான பிரச்சினையையும் சரி செய்கின்றது.
வாய்துர்நாற்றத்தை போக்குவதுடன், உடல் எடையையும் குறைக்கின்றது.
எலுமிச்சை தோலை உலர்த்தி காயவைத்து பொடி செய்து, தினமும் வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்து வரவும்.