தலையனைக்கு அடியில் பூண்டை வைத்து தூங்கினால் கிடைக்கும் நன்மைகள்...
இரவில் தூங்கும் போது பூண்டை தலையனைக்கு அடியில் வைத்து தூங்கினால் கிடைக்கும் நன்மையைக் குறித்து தெரிந்து கொள்வோம்.
பூண்டு
பொதுவாக சமையலுக்கு பழங்காலம் முதலே பூண்டை பயன்படுத்தி வருகின்றனர். ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பின் அடையாளமாக பூண்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
இந்தியா, எகிப்து, கிரீஸ் போன்ற பழங்கால மக்கள் பூண்டை ஒரு மருந்தாகவே பார்த்தார்கள். இது நோய் எதிர்ப்பு சக்தியையும் செரிமானத்தையும் அதிகரிக்கும் என்று உறுதியாக நம்புகின்றனர்.

பூண்டின் நன்மைகள்
பூணடில் அல்லிசின் என்ற வேதிப்பொருள் உள்ளது. இதுதான் அதன் காட்டமான வாசனைக்கு காரணம். தூங்கும் போது இந்த வாசனை நமது சுவாசப் பாதையை சுத்தம் செய்து, மூச்சு விடுவதை எளிதாக்குகிறது.
பழங்காலத்தில் அறையில் இருக்கும் துர்நாற்றத்தை போக்க மக்கள் பூண்டை பயன்படுத்தினார்கள். இது ஒரு இயற்கையான ஏர்ஃப்ரெஷ்னராக செயல்பட்டது.

மேலும் பல கலாச்சாரங்களில் பூண்டுக்கு ஒரு தனி இடம் உண்டு. இது எதிர்மறை ஆற்றல் மற்றும் தீய சக்திகளிடமிருந்து நம்மை பாதுகாக்கும் என்றும் மக்கள் நம்புகிறார்கள்.
இவ்வாறு பல காரணங்கள் உள்ள நிலையில் இன்றும் மக்கள் பலர் ஜன்னல், கதவு அல்லது படுக்கைக்கு அருகில் பூண்டு பற்களை வைக்கும் பழக்கத்தை பின்பற்றி வருகிறார்கள்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |