கேரளா ஸ்டைல் மீன் மாங்காய் கறி... வெறும் 10 நிமிடம் மட்டும் போதும்
சுவையான கேரளா பாரம்பரிய மீன் மாங்காய் கறி வீட்டிலேயே எளிதாக எப்படி செய்வது என்பதை தெரிந்து கொள்வோம்.
பொதுவாக மீன் குழம்பு என்றால் அசைவ பிரியர்களுக்கு அதிகமாக பிடிக்கும். அதிலும் மீன் குழம்பில் மாங்காய் சேர்த்து செய்தால் சுவை இன்னும் அட்டகாசமாக இருக்கும்.
கேரளா ஸ்டைலில் மீன் குழம்பில் மீன் குழம்பில், புளிப்பு, காரம் மற்றும் தேங்காய்பாலின் சுவையுடன் செய்வது வழக்கமாகும்.
மண்சட்டியில் மசாலாவை வதக்கி அதனுடன் பச்சைமிளகாய், மீன்துண்டு இவற்றினை சேர்த்து சமைத்தால் மேலும் சுவை கூடும். அந்த வகையில் மீன் மாங்காய் கறி எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்
சீலா மீன் - அரை கிலோ
பச்சை மாங்காய் - 2 துண்டு
தக்காளி - 2 பொடியாக நறுக்கியது
சின்ன வெங்காயம் - 2 பொடியாக நறுக்கியது
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - சிறிதளவு
பூண்டு - 6 பல்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
தனியா தூள் - 2 ஸ்பூன்
மிளகு தூள் - அரை ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தேங்காய் பால் - ஒரு கப்
கறிவேப்பிலை - இரண்டு கொத்து
தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை
மீனை நன்றாக சுத்தம் செய்து தனியாக வைத்துக் கொள்ளவும். மண் சட்டியில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் அதனுடன் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும்.
பின்பு இதனுடன் நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கிய பின்பு மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லி தூள், மிளகு தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்.

தேவையான தண்ணீர் சேர்த்து குழம்பு நன்றாக கொதித்ததும் அதில் மாங்காய் துண்டுகளை சேர்த்து வேக விடவும். மாங்காய் வெந்ததும், அதனுடன் மீன் துண்டுகளை சேர்த்து கொதிக்க விடவும்.
மீன் வெந்ததும் கடைசியாக தேங்காய்பாலை சேர்த்து மிதமான சூட்டில் சிறிது நேரம் கொதிக்க வைத்து, கடைசியாக கறிவேப்பிலை மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்த்து கொதிக்க விட்டால் சுவையான மாங்காய் மீன் குழம்பு தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |