இந்தியன் டாய்லெட் Vs வெஸ்டர்ன் டாய்லெட்: ஆயுள் வேத நிபுணர் சொல்றதை கேளுங்க
நவீன கால வசதிகளுக்கேற்ப வீட்டின் அமைப்பு மாறி வருகிறது. வசதியாக இருந்தாலும், ஒரு சில விடயங்கள் உடல் ஆரோக்கியத்தில் தாக்கம் செலுத்துகிறது.
சமீப காலமாக ஆரோக்கியமான வாழ்க்கை முறை பற்றிய விழிப்புணர்வு காணொளிகள் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
அதில், இந்தியன் டாய்லெட் Vs வெஸ்டர்ன் டாய்லெட் இரண்டிற்கும் ஆயுள் வேத மருத்துவர் ஒருவர் விளக்கம் கொடுத்துள்ளார்.
அந்த வகையில், இந்தியன் டாய்லெட் Vs வெஸ்டர்ன் டாய்லெட் இரண்டில் எது உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது என்பதை பதிவில் பார்க்கலாம்.
இந்தியன் டாய்லெட் நல்லதா? வெஸ்டர்ன் நல்லதா?
இந்திய முறை கழிப்பறை பலன்கள்
இந்திய முறையில் அமரும் பொழுது அதனை நாம் குக்குட் ஆசனா மற்றும் மலாசனா என்னும் யோகா பயிற்சிகள் என்று அழைப்போம். இதனால் வயிற்றுப்பகுதியில் இரத்த ஓட்டம் சீராக இயங்கி செரிமான கோளாறுகள் வருவது குறைவாக இருக்கும்.
முக்கி கழிவுகளை வெளியேற்ற வேண்டியதில்லை. மலம் குடலில் தங்காமல் முழுமையாக வெளியேற்றுவதால் வாயு, எதுக்களிப்பு, அஜீரண கோளாறு உள்ளிட்ட பிரச்சினைகள் வராது.
இந்தியன் கழிப்பறையில் நோய்த்தொற்று இருக்காது. இந்தியன் கழிப்பறை கால்களை வலுவாக வைக்க உதவி செய்வதால் மனம் ஒருங்கிணைப்பு, கவனச்சிதறல் பிரச்சினைகள் வருவது குறைவாக இருக்கும். ஏனெனில் இது மூலாதாரம் முதல் சிரசு வரை உள்ள அனைத்து சக்கரங்களிலும் ஒருங்கிணைத்து செயல்பட வைக்கிறது.
வயிறு உறுப்புகளின் செயல்பாடு முழுமையாக நடக்கும். அதே சமயம், கர்ப்பிணி பெண்கள் இந்திய கழிப்பறையில் அமரும் பொழுது அவர்களது கூம்பகம் எனப்படும் பெல்விக் தசைகள் விரியும். இதனால் கருப்பைக்கு இரத்த ஓட்டம், மலப்பைக்கு இரத்த ஓட்டம், சிறுநீர்ப்பைக்கு செல்ல கூடிய இரத்த ஓட்டம் உள்ளிட்ட அனைத்தும் சரியாக செயற்படும்.
முழங்கால் தொடங்கி பாதம் வரை இரத்த ஓட்டம் சீராக இருப்பதால் அவர்களுக்கு வரும் முழங்கால் வலிகள் இருக்காது.
இந்திய கழிப்பறை இல்லாதவர்கள்
உடல் ரீதியிலான கோளாறுகள், மூட்டு வலி பிரச்சனை இருப்பவர்கள், உட்கார முடியாதவர்கள் வெஸ்டர்ன் டாய்லெட் பயன்படுத்தலாம்.
சிறுவயது முதல் குழந்தைகளுக்கு வெஸ்டர்ன் டாய்லெட் பழக்கும் பொழுது இடுப்புக்கு கீழ் உள்ள இரத்த ஓட்டம் குறையும். தொப்புளுக்கு கீழ் இருக்கும் உறுப்புகள் பாதிக்க வாய்ப்பு உண்டு.
வெஸ்டர்ன் கழிப்பறை விளைவுகள்
வெஸ்டர்ன் கழிப்பறையில் அமரும் பொழுது சிலருக்கு மலம் சரியாக வெளியேறாமல் இருக்கும். இதனால் அவர்கள் முக்க வேண்டிய தேவை இருக்கும். இதனால் ஹெர்னியா பிரச்சனை, குடல் இறக்கம், மூலம், மலச்சிக்கல், பவுத்திரம் உள்ளிட்ட பிரச்சினைகள் வர வாய்ப்பு உள்ளது.
வெஸ்டர்ன் கழிப்பறைகள் பயன்படுத்துபவர்களுக்கு செரிமான கோளாறுகள் பிரச்சனை வருமம். ஏனெனின் கழிவுகள் முழுமையாக வெளியேறாமல் இருக்கும்.
மலம் குடலில் தங்கி கொண்டே இருக்கும் போது வாயு, எதுக்களிப்பு போன்ற பிரச்சினைகள் வரும். குடல் சுத்தம் என்பது வெஸ்டர்ன் கழிப்பறையில் கிடைக்காது. கழிப்பறையில் கிருமித்தொற்று வெஸ்டர்ன் கழிப்பறையில் உண்டு.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |