மூலிகை நாப்கின் ஏன் பயன்படுத்த வேண்டும்? பெண்கள் கட்டாயம் படிக்கவும்
பருவமெய்திய பெண்களின் உடலில் மாதம் ஒருமுறை நிகழும் உடலியங்கியல் மாற்றமே மாதவிடாய்(Periods).
இச்சுழற்சியின் நீட்டம் 21 நாட்களிலிருந்து 35 நாட்கள் வரை இருக்கும், இந்த சுழற்சி முறை அனைத்து பெண்களுக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை.
ஒவ்வொருவருக்கும் வேறுபடும், வலி அதிகமாகவும், வலி குறைவாகவும், இன்னும் பல அறிகுறிகளும் காணப்படும்.
இக்கால கட்டங்களில் பெண்கள் பயன்படுத்தும் பொருள் நாப்கின்(Napkin), இதனால் நன்மைகள் இருந்தால் தீமைகள் அதிகம் என்று பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
இதில் உள்ள ரசாயன கலப்பினங்கள் பெண்களின் கருப்பையில் பல்வேறு நோய்கள் உருவாகிட வழிவகுத்து விடுகிறது.
நாப்கினில் நிறைந்துள்ள டையாக்சின் மற்றும் பாலிமர் போன்ற சில வேதிப்பொருட்கள் பிறப்பு உறுப்பில் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை உருவாக்கி விடுகிறது.
இதனால்தான் 3-4 மணி நேரத்திற்கு ஒருமுறை நாப்கினை மாற்றிவிட வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.
இதுமட்டுமல்லாது நாப்கினில் பயன்படுத்தப்படும் செயற்கை வாசனை பொருட்களால், கருத்தரிப்பதில் சிக்கல், ஹார்மோன் பிறழ்ச்சி, உறுப்பு பகுதியில் ஒவ்வாமை, இடுப்பு பகுதியில் அழற்சி, தைராய்டு குறைபாடு போன்ற பாதிப்புகளும் உருவாகக்கூடும்.
இப்படி பல நோய்களை அடுக்கிக் கொண்டே போகலாம், இதன் காரணமாகவே மூலிகை நாப்கின் பக்கம் பெண்களின் கவனம் திசைதிரும்பியுள்ளது.
மூலிகை நாப்கின் என்பது என்ன?
துளசி, வேப்பிலை, கற்றாழை ஆகிய மூன்று பொடிகளோடு முதல் ரக சுத்தமான பஞ்சைப் பயன்படுத்தி மூலிகை நாப்கின்களை தயாரித்து வருபவர்கள் ஏராளம்.
இந்த மூலிகைப் பொடிகளின் தாக்கம் கர்ப்பப்பை வரை செல்லும் என்பதாலும், அதனால் எந்த பாதிப்பும் இல்லாததால் தாராளமாக பயன்படுத்தலாம் என சொல்லப்படுகிறது.
குறிப்பாக எந்தவித கிருமித்தொற்றும் இல்லாமல், மாதவிடாயால் ஏற்படும் துர்நாற்றத்தையும் போக்கலாம்.