இந்த நேரத்தில் மறந்தும் கூட கொய்யா பழம் சாப்பிடாதீங்க.. ஆபத்து எச்சரிக்கை
பொதுவாகவே கொய்யா பழம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை மற்றும் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.
இந்த பழங்களில் பொட்டாசியம், கார்போஹைட்ரேட், உணவு நார்ச்சத்து மற்றும் புரதம் போன்ற சத்துக்களை நிறைவாக இருக்கின்றன. அத்துடன் வைட்டமின் சி, வைட்டமின் பி6, கால்சியம், இரும்பு, மக்னீசியம் போன்ற சத்துக்களும் உள்ளன.
அது மட்டுமல்லாது நூறு கிராம் கொய்யாவில் சுமார் முந்நூறு மில்லிகிராம் அஸ்கார்பிக் அமிலம் அதாவது வைட்டமின்-சி உள்ளது.
கொய்யா பழங்கள் அடிக்கடி சாப்பிடுவதால் வயிறு பிரச்சினை சரியாகும் என மருத்துவர்கள் கூறுகின்றார்கள்.
இவ்வளவு சிறப்புக்கள் கொண்ட கொய்யா பழங்களை சாப்பிடுவதால் வேறு என்னென்ன நன்மைகள் ஏற்படுகின்றது என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
கொய்யா பழம்
1. கொய்யா பழம் நார்ச்சத்து நிறைந்தவை என்பதால் செரிமானம், வயிற்றுக்கோளாறு பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வளிக்கின்றது. அத்துடன் கொய்யாவில் இருக்கும் விதைகள் வலிக்கு நிவாரணமும் கொடுக்கின்றது. அதே வேளை அளவிற்கு அதிகமாக எடுத்து கொள்ளும் பொழுது கொய்யாவே வலியை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கின்றது.
2. மலச்சிக்கல் பிரச்சினையால் வெளியில் சொல்ல முடியாமல் அவஸ்தைப்படுபவர்கள் கொய்யா பழத்தை மருந்திற்கு பதிலாக எடுத்து கொள்ளலாம். செரிமானத்தை இலகுப்படுத்தி மலச்சிக்கலை தடுக்கின்றது.
3. கொய்யாவை சாப்பிடுவதால் வாயு மற்றும் அசிடிட்டி பிரச்சனை குறையும்.கொய்யாவில் இருக்கும் அமிலத்தன்மை வாயுவை வெளியேற்றுகின்றது.
4. வயிற்றில் பெரிமளவில் செரிமான கோளாறு காரணமாக தான் வலி ஏற்படுகின்றன. இதற்கு கொய்யா பழம் நிவாரணம் கொடுக்கும் வலி ஏற்படும் வாய்ப்பு குறைவு.
எப்போது சாப்பிட வேண்டும்?
பொதுவாக நாம் அனைவரும் மதிய நேர சாப்பாட்டிற்கு பின்னர் பழங்கள் சாப்பிடுவோம். இன்னும் சில டயட் என்ற பெயரில் இரவு மற்றும் மாலை வேளையில் சாப்பிடுவார்கள்.
இந்த பழக்கத்தை முற்றாக தவிர்க்க வேண்டும். மதிய உணவுக்கு ஒன்றரை மணி நேரம் கழித்து கொய்யாப்பழத்தை உட்கொள்வதால் அனைத்து வயிற்றுப் பிரச்சனைகளிலிருந்தும் நிவாரணம் கிடைக்கும். இதுவே ஆரோக்கியத்தை மேம்படுத்த சிறந்த நேரம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |