தினமும் ஒரு கொய்யாப்பழத்தை உணவில் சேர்த்துக் கொண்டால் இத்தனை நன்மைகளா? வாயை பிளக்கும் நெட்டிசன்கள்!
பொதுவாக மிக இலகுவில் கிடைக்கக்கூடிய கொய்யாப்பழத்தில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது.
இந்த பழத்தை ஏழைகளின் ஆப்பிள் என்றும் அழைப்பதுண்டு ஏனென்றால் சத்துக்கள் அள்ளித்தரக்கூடிய பழம் பார்க்கப்படுகிறது.
கொய்யாமரத்தின் காய் முதல் வேர் அணைத்தும் மருத்துவத்திற்காக பயன்படுத்தப்படுகிறது.
மேலும் கொய்யாப்பழத்தை தினமும் எடுத்துக் கொண்டால் வைட்டமின் சி குறைப்பாட்டால் ஏற்படும் நோய்கள் குறையும் மற்றும் எலும்பு தொடர்பான பிர்ச்சினையை இல்லாமலாக்குகிறது.
இதனை தொடர்ந்து கொய்யாப்பழத்தில் கார்போஹட்ரேட், விட்டமின் சி, பொட்டாசியம், நார்ச்சத்து,ஆன்டி ஆக்சிடன்ட் மற்றும் புரோட்டின் ஆகிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதனை பயம் இல்லாமல் தினமும் கொடுக்கலாம்.
அந்தவகையில் கொய்யாப்பழத்தில் இருக்கும் மருத்துவ குணங்கள் தொடர்பில் தௌிவாக தொடர்ந்து பார்க்கலாம்.
கொய்யாப்பழத்தின் மருத்துவ குணங்கள்
கொய்யாப்பழத்தில் அதிகமான வைட்டமின்கள் இருப்பதால் கொய்யாப்பழத்துடன் சிறிது மிளகுத்தூள் சேர்த்து சாப்பிட்டால் உடல் சோர்வு, பித்தம் நீங்கும் மற்றும் இரத்தம் சுத்தமாக்கப்படும்.
நீரிழிவு நோயாளர்கள் பழங்களை அதிகம் எடுத்துக் கொள்ள மாட்டார்கள் காரணம் இவர்களின் இரத்ததில் இருக்கும் சக்கரையின் அளவை அதிகரித்து விடும். ஆனால் கொய்யாப்பழத்தை எடுத்துக் கொள்ளலாம் ஏனெனின் இந்த பழத்தில் நார்ச்சத்து இருப்பதாலும் மற்றும் குறைந்த அளவு சர்க்கரை இருப்பதாலும் இதனை தாரளமாக எடுத்துக் கொள்ளலாம்.
கொய்யாப்பழத்தில் அதிகமான மெக்னீசியம் சத்து நிறைந்துள்ளது. இதனால் நரம்புகளுக்கும் தசைகளுக்கு ஓய்வளிக்கும் ஆற்றல் அதிமாக இருக்கிறது.
மனழுத்தம் அதிகமாக இருக்கும் போது ஒரு கொய்யாப்பழம் சாப்பிட்டால் போதும் இதனால் மூளையின் செயல்பாடு புத்துணர்ச்சி அளிக்கிறது.
கொய்யா இலையுடன் சந்தனத்தூளை சேர்த்து அரைத்து நெற்றியில் பற்று போட்டால் கடுமையான தலைவலி நீங்கும்.