இந்த கிழமை எலுமிச்சை பழம் கட்டுங்க.. அதிர்ஷ்டம் கதவை தட்டும்!
வாஸ்து சாஸ்த்திரங்களின் படி, வழக்கமாக நாம் செய்யும் விடயங்களில் கொஞ்சம் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
அந்த வகையில், தெய்வ சடங்குகள், உணவுகள் மற்றும் நேர்த்திகடன்கள் நிறைவேற்றம் உள்ளிட்ட கொண்டாட்டங்களுக்கு எலுமிச்சை பழத்தை முக்கிய பொருட்களில் ஒன்றாக பயன்படுத்துகிறார்கள்.
அப்படியான மங்கள பொருட்களில் ஒன்றாக இருக்கும் எலுமிச்சைபழத்தை குறிப்பிட்ட நாட்களில் வீட்டில் கட்டும் பொழுது அதிர்ஷ்டம் கிடைக்கும் என சாஸ்த்திரங்கள் கூறுகின்றன.
மேலும், சில வீடுகளில் அதிகமாக சண்டை வரும், இதற்கு என்ன செய்வது என தெரியாமல் சிலர் இருப்பார்கள். எதிர்மறையான பிரச்சனைகள் வீட்டில் அதிகரிக்கும் பொழுது, பரிகாரங்கள் செய்து அதனை சரிச் செய்யலாம்.
அந்த வகையில், எலுமிச்சைப்பழம் கட்டுவதற்கு உரிய நாள் எது என்பதையும் அதனால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன என்பதையும் தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
எந்த கிழமை கட்டினால் சிறப்பு
வீடுகளில் எலுமிச்சை பழம் கட்ட வேண்டும் என்றால் வெள்ளிக்கிழமைகளில் குளித்த பின்னர் கட்டலாம். ஏனெனின் இந்த நாட்களில் கட்டினால் பலன்கள் அதிகமாக கிடைக்கும் என சாஸ்த்திரங்கள் கூறுகின்றன.
பலன்கள்
1. வீட்டில் வாசலில் எலுமிச்சை பழம் கட்டி வைப்பதால் வீட்டில் உள்ள தீய சக்திகள் வெளியேறி, நேர்மறையான ஆற்றல்கள் வீட்டில் நிறைந்திருக்கும்.
2. எலுமிச்சை பழம் திருஷ்டி தோஷங்களை இல்லாமல் செய்யும் முக்கிய பொருட்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. வீட்டில் அடிக்கடி பிரச்சினை என்றால் அது கண் திருஷ்டி பிரச்சினையாக இருக்கலாம். இவற்றை சரிச் செய்ய விரும்பினால் வெள்ளிக்கிழமைகளில் வீட்டுக்கு எலுமிச்சைப்பழம் வாங்கிக் கட்ட வேண்டும்.
3. மற்ற கிழமைகளை விட வெள்ளிக்கிழமை லட்சுமி கடாட்சம் நிறைந்த நாளாக பார்க்கப்படுகிறது. இந்த நாளில் வீட்டில் எலுமிச்சை பழம் கட்டினால் வீடு தூய்மையாக இருக்கும். நீண்ட நாளாக தீர்க்க முடியாமல் இருந்த பிரச்சினைகளும் குறையும்.
4. எலுமிச்சை பழத்தில் இருந்து வெளிவரும் வாசனை, கிருமிகளையும், பூச்சிகளையும் வீட்டிற்குள் கொண்டு வராமல் வாசலுடன் வெளியேற்றும் ஆற்றல் கொண்டது.
எப்போது கழட்ட வேண்டும்?
எலுமிச்சை பழங்களை நீண்ட நாட்களுக்கு வீட்டில் வாசலில் கட்டி வைக்க முடியாது. வாரத்திற்கு ஒருமுறையாவது எலுமிச்சை பழத்தை கழட்டி மாற்ற வேண்டும். அவற்றை குப்பையில் போடாமல் மனிதர்களின் கால் படாத இடங்களில் போட்டு விட்டு புதிய பழங்களை வாங்கி கட்ட வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |