சப்பாத்தியில் ஒரு டீஸ்பூன் நெய் விட்டால் போதும்…! சுகர் நோயாளிக்கு சூப்பரான டிப்ஸ்
பொதுவாக இந்திய உணவுகளில் அதிகமாக நெய் சேர்ப்பார்கள்.
இந்த உணவுகளை சுகர் நோயாளர்கள் மற்றும் கொலஸ்ரோல் நோயாளர்கள் என எடுத்துக் கொள்வது ஆபத்தை விளைக்கும்.
இந்த நெய்யை வாசனைக்காகவும், தோசை மற்றும் ரொட்டி போன்ற உணவுகளை மென்மையாக்குவதற்கும் அதிகம் இந்தியர்கள் பயன்படுத்துவார்கள்.
மேலும் இதனால் உடல் எடை அதிகரிக்கும் என பலர் கூறுவார்கள். இது முற்றிலும் தவறான விடயம் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில் சுகர் நோயாளர்களுக்கு எந்தவிதமான பாதிப்பை ஏற்படுத்தாமல் எவ்வாறு எடுத்துக் கொள்வது குறித்து பார்க்கலாம்.
நெய்யின் பாதிப்பை குறைக்க சில டிப்ஸ்
சிலர் சப்பாத்தி செய்யும் போது அதிகம் நெய்யிடுவார்கள். இது வாசனைக்காக மட்டுமல்லாது சப்பாத்தியிலுள்ள கிளைசெமிக் குறியீட்டைக் குறைக்கவும் உதவுகிறது.
இவ்வாறு தொடர்ந்து எடுத்துக் கொள்வதால் உணவும் உட்கொள்ளும் போது இரத்த சர்க்கரை அதாவது (குளுக்கோஸ்) அளவை விரைவாக கட்டுபடுத்துகிறது.
நெய் ஒரு நிறைவான உணவு என்பதால், மற்றைய கொழுப்புணவுகளை விட இதனை எடுத்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்தை தரும்.
இதில் அதிகமான வைட்டமின்கள் இருப்பதால் இது கரைக்கக்கூடியது. இதனால் கொலஸ்ரோலை கட்டுபடுத்தி ஹர்மோன்ஸை சமநிலையில் வைக்க உதவுகிறது.
எடுத்துக் கொள்ளும் அளவு
ஒரு சாப்பாத்திக்கு ஒரு டேபிள் ஸ்பூன் அளவு மாத்திரமே எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதால் தேவையற்ற நோயிலிருந்து விடுபடலாம்.
பருப்பு, சாதம், பக்ரி, பாத்தி மற்றும் சப்பாத்திகளில் நெய் சேர்ப்பது கட்டாயமானதாகும். ஏனெனின் இதிலிருக்கும் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் டி, ஏ மற்றும் ஈ ஆகியவற்றை எளிதாக உறிஞ்சுவதற்கு உதவுகிறது.