குழந்தைகளுக்கு மூளை அபார வளர்ச்சி அடைய வேண்டுமா? தினமும் பாலில் இந்தப் பழத்தை கலந்துக் கொடுங்கள்
பெற்றோர்களுக்கு குழந்தைகளில் வளர்ச்சி என்பது மிக முக்கியமானதொன்றுதான். அப்படி குழந்தைகளின் மூளையை பன்மடங்கு வளர்ச்சியடைய சிறந்த தீர்வு ஒன்றைத்தான் இந்தப் பதிவில் பார்க்கப் போகிறோம்.
அத்திப்பழத்தை பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால் எவ்வளவு நன்மைகள் இருக்கிறது தெரியுமா?
அத்திப்பழத்தின் நன்மைகள்
அத்திப்பழம் அதிக மருத்துவ குணங்கள் நிறைந்திருந்தது
சக்கரை நோய், சக்கரைப் புண், உடல் வீக்கம், கட்டிகள் நீர்கட்டிகள், புண், சொறி, சிறங்கு, நமைச்சல் பல பிரச்சினைகளுக்கு சிறந்த பலன்களைக் கொடுக்கும்
அத்திப்பழம் உணவை ஜீரணிக்க செய்கிறது.
உடலுக்கு சுறுசுறுப்பை கொடுக்கிறது
தினமும் அத்திப்ழத்தை சாப்பிட்டு வந்தால் வெண்புள்ளிகள், வெண் குஷ்டம், தோலில் நிறமாற்றம் போன்றவற்றைக் குணப்படுத்தும்
உலர்ந்த அத்திப்பழத்தில் அதிக நார்ச்சத்து இருக்கிறது
வேறு பழங்களில் இல்லாத அளவிற்கு அத்திப்பழத்தில் அதிக அளவு கல்சியம் நிறைத்திருக்கிறது
அத்திப்பழம் உண்டால் வாய்த்துர்நாற்றம் இல்லாமல் போகும்
இப்படி பல நன்மைகளைக் கொண்ட அத்திப்பழத்தில் பால் செய்து கொடுத்தால் குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சி அடையும்.
அத்திப்பால் செய்யும் முறை
அத்திப்பால் தயாரிக்க முதலில் ஒரு பாத்திரத்தில் ஒரு க்ளாஸ் பாலை நன்றாக கொதிக்க வைத்துக் கொள்ளுங்கள்.
அதனில் 3 உலர்ந்த அத்திப்பழங்களை போட்டு நன்றாக கொதிக்க வையுங்கள்.
பின்பு பாலில் வேக வைத்த அத்திப்பழத்தை நன்றாக மசித்து கொள்ளுங்கள்.
பின்பு விரும்பினால் பாலில் தேன் சேர்த்து சூடாக குடிக்கலாம்.