நாள்பட்ட மலச்சிக்கலை தடுக்கும் அத்தி லட்டு.. யாரெல்லாம் சாப்பிட்டால் உடனடி பலன்?
பருவ கால மாற்றங்கள் ஏற்படும் பொழுது சிலருக்கு செரிமான கோளாறு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
அது மட்டுமில்லாமல் இரத்த சோகை, மலச்சிக்கல், குடல் ஆரோக்கியம், தசை ஆரோக்கியம், எடை கட்டுப்பாடு, தோல், முடி ஆரோக்கியம் உள்ளிட்ட பிரச்சினைகளும் ஏற்படும்.
இது போன்று நாள்ப்பட்ட நோய்களுக்கு மருந்து மாத்திரைகளை விட அத்திப்பழம் சிறந்த தீர்வாக உள்ளது என ஆயுள் வேத மருத்துவம் கூறுகிறது.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த சுவையில் இருக்கும் இந்த பழத்தை மருந்து கடைகளில் வாங்கி எடுக்கலாம்.
நமக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் செரிமான கோளாறுகளில் இருந்தும் நிவாரணம் தருகிறது.

இவ்வளவு பலன்களை அள்ளிக் கொடுக்கும் அத்திப்பழத்தை வைத்து எப்படி லட்டு செய்யலாம் என்பதை விளக்கமாக எமது பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- பேரீச்சம்பழம்
- பொடித்த பாதாம்
- பிஸ்தா
- வால்நட்ஸ்
- நெய்
- ஏலக்காய் தூள்
- அத்திப்பழம்- 10 -15 துண்டுகள்
லட்டு செய்முறை
முதலில் அத்திப்பழம், பேரீச்சம்பழம் இரண்டையும் நன்றாக நறுக்கி தனியாக எடுத்துக் கொள்ளவும்.
அதன் பின்னர் அடுப்பில் ஒரு வாணலியை வைத்து நெய் விட்டு சூடானதும், பொடித்த பாதாம், பிஸ்தா இரண்டையும் போட்டு வறுக்கவும். அதனை தொடர்ந்து உடைத்த வால்நட்ஸ், முந்திரியையும் சேர்த்து கொஞ்சமாக வதக்கி எடுக்கவும்.

அடுத்து, அத்திப்பழம், பேரீச்சம்பழம் இரண்டையும் போட்டு மென்மையாக மாறும் வரும் வதக்கி எடுக்கவும். அதனுடன் நறுக்கிய உலர் பழங்கள், ஏலக்காய்த் தூளைப் போட்டு கிளறி இறக்கி தனியாக வைக்கவும்.
சூடு ஆற முன்னர் சிறிய சிறிய லட்டுகளாக பிடிக்கவும் தனியாக ஒரு தட்டில் அடுக்கவும்.
இந்த லட்டு செய்யும் பொழுது தனியாக சர்க்கரை போட வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனின் உலர்ந்த அத்திப்பழம், பேரீச்சம்பழம் சேர்க்கும் பொழுது இயற்கையாகவே இனிப்பு சுவை வந்து விடுகிறது.

காலையில் இந்த லட்டு ஒரு உருண்டை சாப்பிடுவதால் நீங்கள் புத்துணர்ச்சியாக நாளை துவங்கலாம்.
மாயாஜாலம் செய்யும் அத்திப்பழம்
1. நாள்ப்பட்ட மலச்சிக்கல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த அத்திப்பழம் லட்டு தினமும் சாப்பிடலாம். காலையில் சாப்பிடும் பொழுது நாள்ப்பட்ட மலச்சிக்கல் குறையும்.
2. டயட்டில் இருந்து உடல் பருமனை குறைக்க நினைப்பவர்கள் இந்த லட்டு எடுத்து கொள்ளலாம். ஏனெனின் கலோரிகள் குறைவாக இருப்பதால், வயிறு நிறைந்த உணர்வை இது தரும். அதிகமாக சாப்பிடுதை மாத்திரம் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

3. சரும ஆரோக்கியத்திற்கு தேவையான வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அத்திபழ லட்டில் நிறைந்துள்ளது. கொலாஜன் உற்பத்தியையும் அதிகப்படுத்துகிறது.
4. அத்திப்பழத்தில் பொட்டாசியம் சத்து உள்ளது. இது இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவியாக இருக்கிறது.
5. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கும் வேலையையும் அத்திப்பழம் செய்கிறது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |