Natural Hair Conditioner: இளநீர் மட்டும் இருந்தால் போதுமா?
பொதுவாக தலைமுடி பராமரிப்பில் பெண்கள் அதிகமாக கவனம் செலுத்துவார்கள்.
தவறான வாழ்க்கை முறை, ஆரோக்கியமற்ற உணவுகளை சேர்த்து கொள்ளல், போதியளவு ஊட்டச்சத்து இன்மை, நோய் நிலைமைகள் ஆகிய காரணங்களால் தற்போது இருக்கும் பெண்களுக்கு தலைமுடி பிரச்சினை அதிகமாகி வருகின்றது.
இப்படியான நேரங்களில் இயற்கை பொருட்களை கொண்டு வைத்தியம் செய்வது சிறந்தது.
இதன்படி, இளநீர் உடலில் உள்ள பாகங்களுக்கு மட்டுமல்ல தலைமுடி பராமரிப்பிலும் முக்கிய பங்காற்றுகின்றது.
இளநீரால் தலைமுடியை கழுவும் போது இயற்கையாகவே தலைமுடிக்கு நிறைய நன்மைகள் கிடைக்கின்றது.
அந்த வகையில், இளநீரை தலைக்கு பயன்படுத்துவதால் அப்படி என்னென்ன நன்மைகள் கிடைக்க போகின்றது என்பதனை பதிவில் பார்க்கலாம்.
இளநீர் பயன்பாடு
1. இளநீரில் வைட்டமின்கள், தாதுக்கள், எலக்ட்ரோலைட்டுகள் போன்ற ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. இவ்வளவு ஊட்டச்சத்து கொண்ட நீரை தலைக்கு பயன்படுத்துவதால் இயற்கையான முறையில் நீர்ச்சத்தை பெற்றுக் கொள்ள முடியும்.
2. இளநீரை கொண்டு தலைமுடியை கழுவுவதால் வறட்சியாக இருக்கும் கூந்தல் பளபளப்பாக மாறும். அத்துடன் பொடுகு பிரச்சினைக்கும் ஒரு நிரந்தர தீர்வு கிடைக்கும்.
3. சிலர் பெண்களின் தலைமுடி அடிப்பகுதியில் வெடித்து பார்ப்பதற்கு நார்ப்போல் காட்சியளிக்கும். ஆகையால் இளநீர் பயன்பாடு சிறந்தது. இளநீர் பாவணையால் கூந்தல் வெடிப்புக்கள் மறையும்.
4. மன அழுத்தம், ஊட்டச்சத்து குறைபாடு, கூந்தல் பராமரிப்பின்மை உள்ளிட்ட காரணங்களில் தலைமுடி உதிர்வு அதிகமாகும். இது போன்ற சந்தர்ப்பங்களில் இளநீர் கொண்டு தலைமுடியை கழுவலாம். இதனால் உதிர்வு கட்டுபடுத்தப்படுகின்றது.
5. இளநீரின் பி.எச் அளவு கூந்தலின் இயற்கையான பி.எச் அளவை ஒத்திருக்கும். இது கூந்தலின் ஆரோக்கியத்திற்கான சூழலை உருவாக்கிக் கொடுக்கும்.
6. சுருள் முடி, அடர்த்தியான முடி கொண்டவர்கள் கூந்தலை அலசுவதற்கு இளநீரை பயன்படுத்தினால் நல்லது. இளநீரில் உள்ள ஊட்டசத்துக்கள் கண்டிஷனராக செயற்பட்டு கூந்தலுக்கு இயற்கையாகவே பளபளப்பு கொடுக்கும்.
7.கூந்தலுக்கு இயற்கையான நீரேற்றம் கிடைக்கும் பொழுது, கூந்தல் பிரகாசமாகும். இந்த இயற்கையான நீரேற்றம் கொடுக்கும் ஆற்றல் இளநீருக்கு இருக்கின்றது. ஆகையால் இளநீர் பயன்பாட்டினால் இப்படியான பல நன்மைகளை பெற்றுக் கொள்ளலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |