மென்மையான முகம் வேண்டுமா? முட்டையின் வெள்ளைக்கருவை இப்படி பயன்படுத்துங்க..
புரதம் என்றதுமே முதலில் நினைவில் வருவது முட்டை தான். முட்டையின் வெள்ளை கரு, சரும ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் முக்கிய இடம் வகிக்கின்றது. அதில் புரதம் மற்றும் அல்புமின் உள்ளிட்ட விட்டமின்கள், தாதுக்கள் நிறைந்துள்ளது.
முட்டைகள், சர்வதேச அளவில் அனைவராலும் விரும்பி உண்ணப்படும் உணவாக உள்ளது. முட்டைகளினால் ஆன பேஸ்பேக்கை பயன்படுத்தினால், அது முகத்தில் ஏற்படும் பருக்களை தவிர்ப்பது மட்டுமல்லாது, வயதுமூப்பின் காரணமாக வரும் இன்னல்களை குறைக்கிறது.
முட்டையின் வெள்ளைக் கருவை சரும ஆரோக்கியத்திற்கு எவ்வாறு பயன்படுத்த முடியும் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
முட்டையின் வெள்ளைக் கருவை...
சிலருடைய முகத்தில் தேவையற்ற ரோமங்கள் முளைத்து சரும அழகை சீர்குலைக்கும். இவ்வாறு தேவையற்ற ரோமங்களை நீக்குவதற்கு முட்டையின் வெள்ளைக் கருவை பயன்படுத்தலாம்.
முட்டையினால் ஆன பேஸ்பேக், அதில் உள்ள புரதங்கள், ஹியூமெக்டெண்ட்களாக செயல்படுவதால், அது தோலுக்கு நீரேற்றத்தை அதிகரிக்கிறது.இதனால் எப்போதும் சருமம் மென்மையாக இருக்கும்.
முட்டையின் வெள்ளைக் கருவை நெற்றி, கன்னம், உதட்டின் மேல் பகுதி என முகம் முழுவதும் நன்றாக தடவி, 20 நிமிடங்கள் நன்கு உலர்ந்ததும் முகத்தை கழுவ வேண்டும். இதனால் முகம் உடனடி பொலிவு பெறும்.
வாரத்தில் 2 அல்லது 3 முறை இவ்வாறு செய்துவந்தால் முகத்தில் காணப்படும் தேவையற்ற முடிகள் உதிர்ந்துவிடும். முட்டையின் வெள்ளைக்கருவுடன் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவ வேண்டும்.
வாரம் இருமுறை இவ்வாறு செய்துவந்தால் முகப்பருக்களால் ஏற்படும் வடுக்கள் மற்றும் கரும்புள்ளிகள் என்பன மறைந்துவிடும். சரும சுருக்கம் மற்றும் எண்ணெய் தன்மை, முகப்பரு போன்ற பிரச்சினைகளுக்கு முட்டையின் வெள்ளைக்கரு நிவாரணம் அளிப்பதுடன் சரும பொலிவை தக்க வைத்துக்கொள்ளவும் துணைபுரிகின்றது.
முதலில் வெது வெதுப்பான நீரில் முகத்தை நன்கு கழுவ வேண்டும். அதன் பிறகு முட்டையின் வெள்ளைக்கருவை தடவி மசாஜ் செய்ய வேண்டும்.
இவ்வாறு வாரத்திற்கு ஒரு முறை செய்துவந்தால் முகத்தில் உள்ள இறந்த செல்கள் தானாக உதிர்ந்து முகம் கண்ணாடி போல் ஜொலிக்கும்.
முட்டையினால் ஆன பேஸ்பேக்கை பயன்படுத்துவதால், தோலில் உள்ள ஈரப்பதத்தை பேணிக்காத்து, வயது முதிர்வினால் ஏற்படும் இடர்பாடுகளை குறைக்க உதவுகிறது.
முகம் வரண்டு போகும் தன்மை காணப்படால் முட்டையின் வெள்ளைக்கருவை தேன் கலந்து முகத்தில் தடவி 20 நிமிடங்களின் பின்னர் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும், இவ்வாறு செய்துவர முகம் பளபளப்பாக இருக்கும்.
முட்டையின் வெள்ளைக் கருவில் உள்ள புரதங்கள் மற்றும் கொல்லாஜன் ஹார்மோன், வீக்கங்களை குறைத்து, சுருக்கங்கள் மற்றும் கோடுகள் உருவாவதை தடுக்கின்றன.மேலும் எண்ணெய் சருமங்களில் உள்ள பெரிய தோல் துளைகளை மூடிவிடுகின்றன.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
