வேக வைத்த நெல்லிக்காய் தினமும் 1 சாப்பிடுங்க... உடலில் நடக்கும் மாற்றங்கள்
தினமும் ஒரு அவித்த நெல்லிக்காய் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மையை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
உடல் ஆரோக்கியத்தினை மேம்படுத்த நெல்லிக்காய் நமக்கு உதவியாக இருக்கின்றது. ஆயுர்வேதத்திலும் முக்கியமான இடம் பிடித்திருக்கும் நெல்லிக்காய், அளவில் சிரியதாக இருந்தாலும் எண்ணற்ற நன்மையை அளிக்கின்றது.
குறிப்பாக வைட்டமின் சி சத்துக்கள் அதிகமாக இருக்கின்றது. அதுமட்டுமின்றி கனிமச்சத்துக்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகளும் நிறைந்துள்ளது.
இந்நிலையில் நெல்லிக்காயை ஆவியில் வேக வைத்து சாப்பிடுவதால் முழு பலனையும் பெற முடியும். தினமும் ஒரு நெல்லிக்காயை வேக வைத்து சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் ஏராளமாக உள்ளது. அதனை தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.

என்னனெ்னன நன்மைகள் பெறலாம்?
ஆவியில் வேக வைத்த நெல்லிக்காய் சாப்பிடுவதால் செரிமான பிரச்சனை மேம்படுவதுடன், குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சி ஊக்குவிக்கப்பட்டு, மலச்சிக்கலில் இருந்தும் நிவராணம் பெற முடியும்.

வைட்டமின் சி சத்தானது ஆன்டி ஆக்ஸிடன்ட்டன்ட்டாக செயல்பட்டு, ப்ரீ ராடிக்கல்களை எதிர்ப்பதுடன், ஆக்ஜிஜனேற்ற அழுத்தத்தினையும் குறைக்கின்றது. மேலும் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துவதுடன், சளி மற்றும் இருமல் தொற்றுக்களை எதிர்த்து போராடவும் உதவியாக இருக்கின்றது.

சருமத்தினை பளபளப்பாக்கவும், முடி உதிர்வினைக் கட்டுப்படுத்தவும் உதவுகின்றது. நெல்லிக்காய் முடியின் வேர்க்கால்களுக்கு ஊட்டமளித்து, முடியின் அடர்த்தியையும், வலிமையையும் அதிகரிக்கின்றது.

ஆவியில் வேக வைத்த நெல்லிக்காய் இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்ததாகும். கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுவதுடன், நல்ல கொலஸ்ட்ரால் அளவையும் அதிகரிக்கின்றது. இதய நோய் மற்றும் உயர்த்த அழுத்தத்தின் அபாயத்தினையும் குறைப்பதுடன், அழற்சி எதிர்ப்பு பண்புகள், உடலில் ஏற்படும் அழற்சி மற்றும் எரிச்சலை குறைக்கின்றது.

தினமும் வேக வைத்த நெல்லிக்காயை சாப்பிடுவதால் கண் பார்வை மேம்படுகின்றது. இதிலுள்ள வைட்டமின் சி மற்றும் பிற ஆன்டி ஆக்ஸிடன்ட் கண்களின் ஆரோக்கியத்திற்கு அத்தியாவசியமாக உள்ளது. கண் பிரச்சனை அபாயத்தையும் குறைக்கின்றது.

நெல்லிக்காயை நன்றாக கழுவிய பின்பு இட்லி பாத்திரத்தினுள் வைத்து ஒரு 5 முதல் 7 நிமிடம் வேக வைத்து எடுத்து சாப்பிடவும்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |