கொய்யாப்பழம் நல்ல சிவப்பாக இருக்கும் போது சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா? மருத்துவர் விளக்கம்!
பழங்களின் “ராணி” என கொய்யாப்பழத்தை கூறுவார்கள்.
ஏனெனின் கொய்யாப்பழத்தில் கால்சியம் சத்து, பொட்டாசியம் சத்து, நார்ச்சத்து, விட்டமின சி, வைட்டமின் ஏ உட்பட பல சத்துக்கள் உள்ளன.
இதனால் மனித உடலுக்கு முற்றிலும் நன்மையை மாத்திரம் கொடுக்கும் பழமாக பார்க்கப்படுகின்றது.
அந்த வகையில் கொய்யாப்பழங்களில் இரண்டு நிறங்கள் இருக்கின்றன.
அதில் சிவப்பு நிற கொய்யாப்பழம் உடலுக்கு நல்லது என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
சிவப்பு கொய்யா சாப்பிட்டால் என்ன நடக்கும்?
1. சிவப்பு அல்லது இளஞ்சிவப்பு நிற கொய்யாவில் அதிக தண்ணீர் மற்றும் குறைவான சர்க்கரை இருப்பதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றது. இதனால் சர்க்கரை நோயுள்ளவர்கள் தாரளமாக எடுத்து கொள்ளலாம்.
2. சிவப்பு கொய்யாவை உட்கொள்வது புரோஸ்டேட் புற்றுநோயின் அபாயம் தடுக்கப்படுகின்றது. இதனால் ஆண்கள் கட்டாயமாக இந்த பழத்தை எடுத்து கொள்ள வேண்டும்.
3. மன அழுத்தம் உள்ளவர்கள் கொய்யாபழங்களை அடிக்கடி எடுத்து கொள்ள வேண்டும். ஏனெனின் சிவப்பு கொய்யாவில் அதிக அளவு பொட்டாசியம் உள்ளது, அத்துடன் இரத்த அழுத்தம் தொடர்பான பிற அறிகுறிகளைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
4. மலச்சிக்கல் பிரச்சினைகளுக்கு நார்ச்சத்து நிறைந்த கொய்யாபழங்களை அடிக்கடி எடுத்து கொள்ள வேண்டும். கொய்யாப்பழத்தை தினமும் உட்கொள்வது செரிமான செயல்முறையை துரிதப்படுத்துக்கின்றது.
5. வெள்ளை கொய்யாவை விட சிவப்பு கொய்யாவில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகமாக உள்ளது. இது சரும ஆரோக்கியத்தை பாதுக்காக்கின்றது. தோல் புற்றுநோயின் அபாயத்தையும் தடுக்கின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |