ஆண்மை குறைபாடு பிரச்சனையால் அவதிப்படுகிறீர்களா? அப்போ இந்த பழம் சாப்பிடுங்க!
பொதுவாக 30 வயதை தாண்டுபவர்களை பாதிக்கும் நோய்களில் நரம்பு தளர்ச்சி முக்கிய இடத்தை பிடிக்கிறது.
இந்த நோய் வந்து விட்டாலே நம்மால் ஒரு வேலையை கூட சரியாக செய்ய முடியாது. அதற்கு என்ன மருந்து எடுத்தாலும் சரியாக வில்லையென்றால் ஒரு தடவை உணவின் மூலம் கட்டுபடுத்த முயற்சி செய்து பாருங்கள்.
அந்த வகையில் நரம்புத் தளர்ச்சி உடையவர்கள் தினமும் செவ்வாழைப்பழம் சாப்பிடுவது நல்லது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள். இது தொடர்பில் நாம் தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.

பொதுவாக செவ்வாழையை சாப்பிடுவதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையிலான அனைவருக்கும் அதிகமான ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றது.
இதன்படி, செவ்வாழையில், பொட்டாசியம், மெக்னீஷியம், கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் சி, தையமின், ஃபோலிக் அமிலம், பீட்டா கரோட்டின் என பல வைட்டமின்கள், தாது உப்புகள் ஆகிய ஊட்டசத்துகள் அதிகம் இருக்கின்றன.
இது மனிதர்களின் இரத்தயோட்டத்தை அதிகப்படுத்துகின்றது. மேலும் சிறுநீரகப் பிரச்னைகளை சரிசெய்கிறது.
இதனை தொடர்ந்து சிறுநீரக கல், மலச்சிக்கல் என்பவற்றை குணப்படுத்துகிறது.
அத்துடன் குடல் இயக்கத்தை சீர்படுத்துகின்றது. சில ஆண்கள் ஆண்மை குறைபாடு பிரச்சினை பாதிக்கப்பட்டிருப்பார்கள். அவர்கள் மருந்துகள் எடுத்து கொண்டால் அதனுடன் செவ்வாழையும் சேர்த்து எடுத்து கொள்ள வேண்டும்.

எப்போது சாப்பிட வேண்டும்?
1. செவ்வாழை சாப்பிடும் போது உணவுகள் சாப்பிட்டிருக்கக் கூடாது.
2. வழமையான பழங்கள் போல் எடுத்து கொள்வதை தவிர்க்க வேண்டும்.
3. இரண்டு வேளைகள் சாப்பிடலாம் ( காலை - 11 மணி, மாலை - 4 மணி)
4. வெறும் வயிற்றில் கூட சாப்பிடலாம்.
5. இரவு நேர சாப்பாட்டிற்கு பின்னர் ஒரு சில மணி கழித்து சாப்பிடலாம்.