Pineapple Benefits: அன்னாசி பழத்தில் கொட்டிக்கிடக்கும் மருத்துவ நன்மைகள்
பொதுவாக பழங்கள் நமக்கு பல ஆரோக்கியமான நன்மைகளை வழங்குவதால், சமச்சீரான டயட்டில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றது.
பெரும்பாலும் ஆண்டு முழுவதும் கிடைக்கும் மலிவான மற்றும் ஆரோக்கியம் நிறைந்த பழங்கில் ஒன்றுதான் அன்னாசிப்பழம். இதனை தினசரி உணவில் சேர்த்துக் கொள்வதால் கிடைக்கக்கூடிய எண்ணற்ற மருத்துவ நன்மைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

மருத்துவ குணங்கள்
அன்னாசிப்பழங்களில் மாங்கனீஸ் அளவு செரிந்து காணப்படுவதால், இது எலும்புகள் ஆரோக்கியமாக இருக்கவும், எலும்பு சார்ந்த குறைபாடுகளை சரிசெய்யவும் பெரிதும் துணைப்புரிகின்றது.
Fatty Liver Disease Symptoms: இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ கல்லீரல் ஆபத்தில் இருக்குதுன்னு அர்த்தம்
165 கிராம் அன்னாசி பழத்தில் நாளொன்றுக்கு பரிந்துரைக்கப்பட்ட அளவில் 76% மாங்கனீஸ் காணப்படுகின்றது. அதில் நிறைந்து காணப்படும் வைட்டமின் சி உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன் சரும ஆரோக்கியத்தை பாதுகாப்பதிலும் பெரும் பங்கு வகிக்கின்றது.

அன்னாசிப்பழத்தில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி, கால்சியம், பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் ஆகிய அனைத்து ஊட்டச்சத்துக்களும் செரிந்து காணப்படுவதால் அன்றாட உணவில் காணப்படும் ஊட்டசத்து குறைப்பாடுகளை நிவர்த்தி செய்ய அன்னாசிப்பழம் ஒரு சிறந்த தெரிவாக இருக்கும்.
தினமும் சிறிதளவு அன்னாசிப்பழத்தைச் சாப்பிட்டு வந்தால், உடலில் காணப்படும் ஊட்டச்சத்துக்களின் குறைபாட்டை விரைவில் சீர்செய்ய முடியும்.

அன்னாசிப்பழத்தில் ரோமிலைன் (bromelain) போன்ற நொதிகள் அழற்சியை குறைக்க பெரிதும் உதவுகின்றது. இதில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் செரிமான பிரச்சினைகளை நீக்கி மலச்சிக்கலுக்கும் தீர்வு கொடுக்கின்றது.
உடல் எடையை கட்டுக்குள் வைக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு அன்னாசி சிறந்த தெரிவாக இருக்கும். அன்னாசி பழங்களில் கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் குறைவாக இருப்பதால் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றன.

மேலும் அன்னாசியில் காணப்படும் அதிக நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் வைட்டமின் சி உள்ளிட்டவையும் கூட இதய ஆரோக்கியத்திற்கு பெரிதும் துணைப்புரிகின்றது.
கொலஸ்ட்ரால் லெவல் மற்றும் ரத்த அழுத்தத்தை பராமரிப்பதில் அன்னாசிப்பழம் சிறப்பாக பங்காற்றுக்கின்றது. அதில் நீர்ச்சத்து அதிகம் இருப்பதால் நம்முடைய உடலை ஹைட்ரேட்டாக வைத்திருப்பது மட்டுமன்றி சரும பாதுகாப்புக்கும் உதவுகின்றது.

அன்னாசிப்பழத்தில் சக்திவாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ் மற்றும் அதிக அளவு நார்ச்சத்து இருப்பதால்,புற்றுநோயை ஏற்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கஸ்ல்களின் உற்பத்தியை தடுத்து புற்றுநோய் அபாயத்தை குறைக்க உதவுகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |