வீட்டில் அடிக்கடி கேழ்வரகு இட்லி செய்வது ஏன்?
பொதுவாக வீட்டில் தானியங்கள் அதிகமாக சமைப்பது நம்முடைய உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
தானியங்களில் இருக்கும் புரதம், பொட்டாசியம், மக்னீசியம், காபோவைதரேற்று உள்ளிட்ட சத்துக்கள் உடலிலுக்கு தேவையான ஆரோக்கியத்தை பெற்று தருகிறது.
அந்த வகையில், சிறுதானிய வகைகளில் ஒன்றான கேழ்வரகை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது அவசியம்.
செரிமானம் துவக்கம் சரும பிரச்சினைகள் வரை கேழ்வரகு தாக்கம் செலுத்துக்கின்றன. அப்படி என்னென்ன மாதிரியான நோய்களுக்கு கேழ்வரகு மருந்தாக வேலைச் செய்கிறது என்பதனை தொடர்ந்து நாம் பதிவில் பார்க்கலாம்.
கேழ்வரகில் உள்ள சத்துக்கள்
- புரதம் - கேப்பையில் அதிகமான புரதச்சத்து இருக்கின்றது. இது தசைகளின் வளர்ச்சியை மேம்படுத்த உதவியாக இருக்கிறது.
- இரும்புச்சத்து - மனித உடலில் சிவப்பு இரத்த அணுக்களில் ஆக்ஸிஜனை கொண்டு செல்ல இரும்புச்சத்து அவசியம் தேவைப்படுகிறது. கேழ்வரகு அதிகமாக சாப்பிடும் பொழுது உடலுக்கு தேவையான இரும்புச்சத்து இரத்தத்துடன் கலந்து மேற்குறிப்பிட்ட வேலையை செய்கிறது.
- மக்னீசியம் - இரத்தம் அழுத்தத்தை கட்டிபடுத்தி, இதய ஆரோக்கியத்திற்கு கேழ்வரகு வழிசமைக்கிறது. ஏனெனின் கேழ்வரகில் மக்னீசியம் சத்து இருக்கிறது.
- வைட்டமின்கள் - வைட்டமின்கள் என பார்க்கும் பொழுது தானியங்களில் அதிகமாகவே காணப்படும். இதன்படி கேழ்வரகில் வைட்டமின் பி1, வைட்டமின் பி2, வைட்டமின் பி3, ஃபோலேட் மற்றும் நியாசின் போன்ற பல வைட்டமின்கள் இருக்கின்றன. இது உடல் வளர்ச்சிக்கு ஏதுவாக அமைகிறது.
- ஆன்டிஆக்ஸிடன்ட்கள் - கேப்பை என்றாலே அதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்திருக்கும், இது செல்களினால் ஏற்படும் பாதிப்பை குறைத்து புற்றுநோய் போன்ற கொடி நோய்களிலிருந்து எம்மை பாதுகாக்கும்.
கேழ்வரகு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
1. உடல் சோர்வாகவே இருக்கிறது சரியாக வேலை செய்ய முடியவில்லை என புலம்பவர்கள் காலையில் கேழ்வரகு கஞ்சி செய்து குடிக்கலாம். இதிலிருக்கும் புரதச்சத்துக்கள் உடலின் சோம்பலை நீக்கி சுறுசுறுப்பாக இருக்க உதவிச் செய்கிறது.
2. நோய்கள் உடலை தாக்க விடாமல் அதற்கு எதிராக போராடும் நோய் எதிர்ப்பு சக்தி கேழ்வரகு சாப்பிடுவதால் அதிகரிக்கிறது.
3. கேழ்வரகில் உள்ள “ட்ரிப்டோபான்” எனப்படும் அமினோ அமிலம் பசியை கட்டுபடுத்தி உடல் எடை குறைப்பிற்கு உதவிச் செய்கிறது.
4. குழந்தைக்கு பால் கொடுக்கும் தாய்மார்கள் கேழ்வரகுடன் தொடர்பான உணவுகளை விரும்பி சாப்பிடலாம். இதில் ஆரோக்கியம் தரும் வைட்டமின்கள் இருக்கின்றன. அத்துடன் பால்ச்சுரப்பதற்கான வழியையும் சீர்ப்படுத்துகிறது.
5. காலையில் கேழ்வரகு உணவுகள் சாப்பிடும் பொழுது மிதியோனின், லைசின் என்ற இரு வேதிப்பொருட்கள் உற்பத்திச் செய்யப்படுகின்றன. இதனால் தோலில் காணப்படும் சுருக்கங்கள் நீங்கி, பளபளப்பான தோற்றத்தை பெறலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |