சர்க்கரையுடன் மஞ்சள் கலந்து சாப்பிட்டால் குளிர்காலத்திற்கு நல்லதா? பெண்கள் அவசியம் தெரிஞ்சிக்கோங்க
பொதுவாக சிலர் வெல்லம், பச்சை மஞ்சள் கலந்து சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
வேகமாக நகரக்கூடிய இன்றைய வாழ்க்கை முறையில் நமது ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை வழங்க எப்போதும் மறந்து விடக் கூடாது. பல்வேறு விதமான உணவு வகைகளில் சந்தையில் விற்கப்படுகின்றன.
இவற்றை வாங்கி சாப்பிடுவதால் பக்க விளைவுகள் அதிகமாக வருகின்றதாக மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.
தினம் சாப்பாட்டில் ஆரோக்கியம் நிறைந்த சில உணவுகளை எடுத்து கொள்வது அவசியம். அதிலும் ஆண்களை விட பெண்கள் அதிகமாக எடுத்து கொள்ள வேண்டும்.
அந்த வகையில் வெல்லம் மற்றும் பச்சை மஞ்சளை சாப்பிடுவதை ஏன் சிலர் பழக்கமாக கொண்டுள்ளனர்? அப்படி என்னென்ன மருத்துவ நன்மைகள் இதில் இருக்கின்றது என்பதனை பதிவில் பார்க்கலாம்.
சர்க்கரை + மஞ்சள்
1. கரும்பிலிருந்து பிரித்தெடுக்கப்படும் தனியாக பிரித்தெடுக்கப்படும் சர்க்கரையில் இரும்பு சத்து, மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் வைட்டமின்கள் உள்ளன. இது இயற்கையான ஆற்றலை அதிகரிக்கின்றது.
2. பச்சை மஞ்சளில் வீக்க எதிர்ப்பு பண்பு, ஆன்டி ஆக்சிடன்ட் காணப்படுகிறது. இது செரிமானம், வலுவூட்டப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் குறைந்த ஆக்சிடேட்டிவ் அழுத்தம் போன்ற நன்மைகளை தருகிறது. காலை வேலையில் சர்க்கரையுடன் மஞ்சள் கலந்து சாப்பிட்டால் ஆரோக்கியம் இன்னும் அதிகரிக்கும்.
3. பச்சை மஞ்சளில் குர்குமின் என்ற காம்பவுண்ட் இருக்கின்றது. இது அழற்சி எதிர்ப்பு போராடுகின்றது. அத்துடன் மூட்டு ஆரோக்கியம் மேம்படுவதோடு ஆர்த்தரைட்டிஸ் மற்றும் அழற்சி காரணமாக ஏற்படக்கூடிய வலியிலிருந்து நிவாரணம் பெறவும் உதவுகின்றது.
4. வெள்ளம் மற்றும் பச்சை மஞ்சள் ஆகிய இரண்டும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றது. இப்படியான உணவுகளை அடிக்கடி எடுத்து கொண்டால் தொற்றுக்கள் குறைய வாய்ப்பு இருக்கின்றது.
5. கல்லீரலில் இருக்கும் நச்சுக்களை அகற்றும் ஆற்றல் வெல்லத்திற்கு உள்ளது. இதனால் காலையில் மஞ்சள், சர்க்கரை உருண்டை சாப்பிடலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |