தினமும் காலையில் பழைய சாதம் சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும் தெரியுமா?
தினமும் காலையில் பழைய சாதம் சாப்பிவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம்.
பழைய சோறு:
நமது உடம்பிற்கு தேவையான சத்துக்கள் நாம் சாப்பிடும் உணவுகளிலிருந்து கிடைக்கின்றது. ஆனால் அந்த சத்துக்களை சேமித்து வைப்பதற்கு குடலின் ஆரோக்கியம் மிக முக்கியம் ஆகும்.
ஆம் ஆரோக்கியத்தினை சேமித்து வைக்க குடல் முக்கிய பங்கு வகிக்கின்றது. குடலில் இருக்கும் நல்ல பாக்டீரியாக்கள் தான் இதற்கு காரணம். இவை செரிமானத்தை மேம்படுத்தி, நோய் எதிர்ப்பு சக்தியையும் அளிக்கின்றது.

தினமும் காலையில் நாம் பழைய சாதத்தினை தொடர்ந்து எடுத்துக் கொள்ளும் போது என்னென்ன நன்மையினைப் பெறலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
என்ன பலன்:
இந்த உணவு சாப்பிடுவதன் மூலம் நம் செரிமான பிரச்சனைகள் குணமடைகிறது. மற்றும் குடல் ஆரோக்கியத்தை வலுப்படுத்துகிறது.
முக்கியமாக இது நம் உடலின் வெப்பத்தை குறைத்து நம்மை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது. இதில் இரும்புச்சத்து அதிகமாகவே உள்ளது.

அது மட்டுமின்றி இதில் தாதுக்கள் அதிகமாக உள்ளதால் இது நம்மை நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும், புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது.
அது மட்டுமின்றி இதில் நிறைய ஊட்டச்சத்துக்கள் உள்ளதால் இது நமக்கு பல நோய்களில் இருந்து நம்மை பாதுகாப்பதற்கு நமக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது.

எனவே, இந்த எளிய மற்றும் செலவு குறைவான பழைய சோறு, காலையில் சாப்பிடுவதற்கு ஏற்ற மிகச்சிறந்த பாரம்பரிய உணவாகும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |