தேன் நெல்லிக்காயில் இருக்கும் ஆரோக்கியம் பற்றி தெரியுமா? வைத்தியம் கூறும் ஆலோசனை இது
பொதுவாக நெல்லிக்காய் புளிப்பாக இருப்பதால் அதனை பலர் விரும்பி உண்ணமாட்டார்கள். ஆனால் அந்த புளிப்பிலும் பல நன்மைகள் இருக்கிறது.
ஒரு நெல்லிக்காயில் விட்டமின் சி, விட்டமின் ஏ, அயன், கல்சியம், மெக்னீசியம் போன்றன சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. இவை நம் உடம்பில் ஏற்படக்கூடிய பல விதமான நோய்களை தீர்க்கும் மருந்தாகவும் பயன்படுகிறது. சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேதம் போன்ற மருத்துவ முறைகளில் இவை மருந்தாக நெல்லிக்காய் பயன்படுத்தப்படுகிறது.
இவ்வாறு பல நன்மைகள் கொண்ட நெல்லிக்காயில் தேன் கலந்து சாப்பிட்டால் எவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதென்பததை மருத்துவர் அருண்குமார் விளக்கமாக கூறியிருக்கிறார்.
தேன் நெல்லிக்காய் செய்யும் முறை
தேவையான அளவு நெல்லிக்காயை எடுத்து கழுவி சுத்தம் செய்து இட்லி பானையில் 20 நிமிடத்திற்கு வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு வேகவைத்து எடுத்துக் கொண்ட நெல்லிக்காயை நீள்வாக்கில் வெட்டி தேன் சேர்த்து ஒரு ஜாடியில் போட்டு 5 இலிருந்து 7 நாட்கள் வரைக்கும் வெயிலில் காயவைத்து எடுத்துக் கொண்டால் பாரம்பரிய தேன் நெல்லிக்காய் தயார்.
தேன் நெல்லிக்காயின் நன்மைகள்
தேனில் ஊறவைத்த நெல்லிக்காயை உட்கொள்வதன் மிக முக்கியமான ஆரோக்கிய நன்மைகளில் ஒன்று அதன் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
தேனில் ஊறவைத்த நெல்லிக்காயை தினமும் சாப்பிட்டு வந்தால் இளமையாக இருக்கும். உடலை புத்துணர்ச்சியடையச் செய்யும், முகத்தில் உள்ள சுருக்கங்கள் மற்றும் மெல்லிய கோடுகளையும் நீக்குகிறது.
தேனில் ஊறவைத்த நெல்லியை சாப்பிடுவது உங்கள் கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருப்பதுடன் மஞ்சள் காமாலையையும் குணப்படுத்துகிறது. இது உங்கள் உடலில் இருந்து திரட்டப்பட்ட பித்த நிறமிகளையும் கல்லீரலில் இருந்து நச்சு சுமைகளையும் நீக்குகிறது.
இருமல், சளி மற்றும் தொண்டை புண் ஆகியவற்றிலிருந்து உங்களுக்கு மிகவும் நிவாரணம் தரும்.
தேனில் ஊறவைத்த நெல்லிக்காயை தினமும் உட்கொள்வது கருத்தரிக்கும் வாய்ப்பை அதிகரிக்கும் மற்றும் பெண்களின் மாதவிடாய் வலியிலிருந்து நிவாரணம் அளிக்கிறது. தேன் மற்றும் நெல்லிக்காய் கலவையாலும் மாதவிடாய் முறைகேடுகளை சரிசெய்யலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |