உணவின் ருசியை அதிகரிக்க ஈஸியான சமையல் டிப்ஸ்: இனி டெய்லி இப்படி ட்ரை பண்ணுங்க
பொதுவாகவே சமைக்கும் அனைவருக்கும் பிடித்த மாதிரி சமைக்க வேண்டும் என்பது தான் இல்லத்தரசிகளின் பெரிய ஆசை.
இதற்காக புதிய புதிய வகைகளில் சமையல்களை செய்வார்கள் அப்படி சமையலில் அசத்த சில சூப்பரான டிப்ஸ்களை இங்கே பார்க்கலாம்.
சமையல் டிப்ஸ்
1. அரிசி களைந்த தண்ணீரில் கிழங்குகளை வேக வைத்தால் சீக்கிரமாக வெந்துவிடும்.
2. மோர்க்குழம்பு செய்யும்போது மிளகாயை நன்றாக வதக்கி அரைத்து சேர்த்தால் குழம்பு நல்ல நிறமாக காட்சி அளிக்கும். ருசியாகவும் இருக்கும்.
3. பாகற்காய் குழம்பில் கேரட் ஒன்றை துண்டுகளாக நறுக்கிப்போட்டால், கசப்புத்தன்மை அதிகம் இருக்காது.
4. கீரையை வேகவிடும்போது சிறிதளவு வெண்ணெய் அல்லது எண்ணெய் சேர்த்து வேகவைத்தால் பச்சை நிறம் மாறாது; ருசியாகவும் இருக்கும்.
5. தக்காளி சூப் நீர்த்துப் போய்விட்டால் மாவு கரைத்து விடுவதற்கு பதில், வெந்த உருளைக்கிழங்கு ஒன்றை மசித்து சேர்த்தால் ருசியும் கூடும்; சத்தும் அதிகம் கிடைக்கும்.
6. வடை தட்டும்போது உள்ளே ஒரு பனீர் துண்டை வைத்து மாவால் மூடி எண்ணெயில் போட்டுப் பொரித்து எடுத்தால், வடை வித்தியாசமான ருசியுடன் இருக்கும்.
7. இட்லிமாவு அரைத்தபின் ஒரு வெற்றிலையைக் கிள்ளிப்போட்டு வைத்தால், மாவு பொங்கி வழியாது.
8. பூரிக்கு மா பிசையும் போது கால் தேக்கரண்டி ரவை சேர்த்துக் கொண்டால் பூரி புஸு புஸுவெ இருக்கும்.
9. சூப் செய்யும் போது சோள மாவிற்கு பதிலாக ஒரு தேக்கரண்டி அவலை வறுத்து சேர்த்தால் சூப் கெட்டியாகவும் ருசியாகவும் இருக்கும்.
10. முட்டையில் ஆம்லெட் செய்யும் போது முட்டையை நன்கு அடித்து அதனுள் சிறிது கடலை மா சேர்த்தால் ஆம்லெட் சுவையாகவும் மணமாகவும் இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |