சொள சௌ காயை எப்படி சமைத்து சாப்பிட்டால் உடலுக்கு நன்மைகளை தரும்?
காய்கறிகளில் சௌ சொள காயில் பல வகையான சத்துக்கள் நிறைந்திருக்கிறது. அதை முழுவதுமாக உடலுக்கு எப்படி எடுத்துக்கொள்ளலாம் என்பதை இந்த பதிவில் பார்கலாம்.
சௌ சௌ காய்
இந்த காயில் ,வைட்டமின் A,B,C,K போன்ற எண்ணற்ற சத்துக்கள் அடங்கியிருக்கும் நீர்க்காய் ஆகும். இன்றைய காலத்தில் அதிகளவில் காணக்கூடிய புற்றுநோயை வர விடாமல் தடுத்து நிறுத்தக்கூடிய அனைத்து சிறப்பும் இதனிடம் காணப்படுகிறது.
பெண்கள் மட்டும் ஆண்களுக்கு இடுப்பு பகுதியில் தேங்கி இருக்கும் கொழுப்பை இந்த காய் கரைத்து விடுகின்றது.
இதில் குறைந்த கலோரிகளும், அதிகமான நார்ச்சத்தும் உள்ளதால், டயட்டில் இருப்பவர்கள் இதை உணவாக சேர்த்து கொள்ளக்கூடியதாக உள்ளது.
கர்ப்பிணி பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் கை, கால்களில் ஏற்படும் வீக்கத்தை, குறைக்க இந்த சௌ சௌ உணவைதான் அதிகம் எடுத்துக்கொள்வார்கள்.
இதை வேகவைத்ததுமே, மென்மையாக சுவையாக மாறிவிவிடுகிறது. எனினும், இதிலுள்ள கொட்டையை நீக்கிவிட்டு சமைக்க வேண்டும். அதைவிட முக்கியம், சமைத்த உடனேயே சாப்பிட்டு விட வேண்டும்.
இந்த சௌசௌவை தண்ணீர் ஊற்றி வேகவைத்து உப்பு, மிளகு, தண்ணீர் சேர்த்து சூப் போல செய்து, சாப்பிடுவதற்கு முன்பு குடித்து வந்தாலே போதும்.
அல்லது நிறைய தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு, சீரகம், மிளகு தாளித்து கஞ்சி போல் செய்தும் குடிக்கலாம். இப்படி செய்தால் இதிலுள்ள சத்துக்களை நேரடியாக உடல் உறிஞ்சி எடுத்துக்கொண்டு உடலில் தேங்கி நிற்கும் கொழுப்பை அகற்றுகின்றது.