100 கிராம் கருவாடு சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
அசைவ பிரியர்களில் சிலருக்கு மிகவும் பிடித்தது கருவாடு தான். கருவாடு விலை குறைவாகவும் சந்தையில் கிடைக்கிறது. கடல் சார்ந்த பகுதிகளில் கருவாடு சாப்பிடும் பழக்கம் மிகவும் அதிகம்.
மீனை காய வைத்து பெறப்படும் இந்த கருவாட்டில் ஏராளமான சத்துக்கள் உள்ளன என்பத பலருக்கும் தெரியாது. கருவாட்டு குழம்பு கருவாட்டு தொக்கு சாதத்துடன் சாப்பிட்டால் சுவை பிரமாதமாக இருப்பதுடன் சத்துக்களும் அதிகம் காணப்படுகின்றது.

ஆனால் கருவாட்டில் உப்பு அதிகமாக இருப்பதால், இதை சாப்பிட பலரும் யோசிப்பார்கள். ஏனெனில் உப்பானது உயிருக்கே ஆபத்தை உண்டாக்கும் பல நோய்களின் அபாயத்தை அதிகரித்துவிடும்.
ஆனால் எதையும் அளவாக சாப்பிட்டால் ஆபத்தானது என சொல்லலாம். அந்த வகையில் கருவாடு சாப்பிட்டால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்க்கலாம்.

கருவாடு சாப்பிடுவதன் நன்மைகள்
100 கிராம் மீனில் 20 முதல் 22 கிராம் புரோட்டீன் உள்ளது என்றால், 100 கிராம் கருவாட்டில் 55 கிராம் முதல் 70 கிராம் புரோட்டீன் உள்ளது. அதுவும் இருக்கும் உணவுகளிலேயே அதிகளவு புரோட்டீன் கருவாட்டில் தான் உள்ளது.
ஒரு நாளைக்கு 100 கிராம் கருவாடு சாப்பிட்டாலே ஒரு நாளைக்கு உடலுக்கு வேண்டிய புரோட்டீன் எளிதில் கிடைத்துவிடும். அதுமட்டுமின்றி, கருவாட்டின் மூலம் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களும் கிடைக்கும்.

ஆனால் நற்பதமான மீனை விட சற்று குறைவான அளவில் கிடைக்கும். மேலும் கருவாட்டில் உள்ள முட்கள் மெல்லியதாக இருப்பதால், அதை முட்களுடன் சேர்த்து சாப்பிடுவோம்.
அப்படி சாப்பிடும் போது அதன் மூலம் கால்சியம் கிடைக்கும். அதுவும் பால் மூலம் கிடைப்பதை விட பலமடங்கு அதிகமாக கால்சியம் கிடைக்கும். இதுதவிர நுண் சத்துக்களான வைட்டமின் பி12, செலினியம், அயோடின் போன்ற சத்துக்களும் கிடைக்கும்.
மொத்தத்தில் ஒரு நல்ல புரோட்டீன் எடுக்க நினைத்தால், அசைவ விரும்பிகளுக்கு கருவாடு ஒரு மிகச்சிறந்த தேர்வு. மேலும் கருவாட்டை குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் பெரியவர்கள் என்று அனைவருமே சாப்பிடலாம். யோசிக்கவே வேண்டாம்" என்றும் டாக்டர் கூறியுள்ளார்.

கருவாடு யார் சாப்பிட கூடாது?
கருவாட்டை சாதாரண மக்கள் குழந்தைகள் சாப்பிடலாம். ஆனால் ஏற்கனவே இதய நோய் உள்ளவர்கள், சிறுநீரக நோய் உள்ளவர்கள், உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் கருவாட்டை உட்கொள்வதை தவிர்த்து, பிரஷ்ஷான மீனை உட்கொள்வது நல்லது" என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
சமீபத்தில் ஸ்ரீலங்காவில் குழந்தைகளுக்கான உணவு பரிந்துரை அட்டவணையில், குழந்தைகளுக்கு 6 மாதத்தில் இணை உணவை ஆரம்பிக்கும் போது, அதில் நெத்திலிக் கருவாட்டை அரைத்து பொடி செய்து, இணை உணவுடன் 2 ஸ்பூன் சேர்த்து கொடுக்குமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |