நீரிழிவு இதய நோயினை அடித்து விரட்டும் ஒரே ஒரு பவுடர்! வாழ்நாள் முழுவதும் நிம்மதி
முருங்கை மரத்தின் இலைகள், பூ, காய்கள் என எல்லாமே ஆரோக்கிய நன்மை நிறைந்தது. இதன் நன்மைகளை உணர்ந்த நம் முன்னோர்கள் இதை சமையலில் பயன்படுத்தி வந்தார்கள்.
முருங்கையின் சத்துக்கள்
முருங்கைக் கீரையில், நார்ச்சத்து, இரும்புச் சத்து என நிறைய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதனை பொறியல், சாம்பார் என எந்த வகையில் சமைத்தாலும் சுவையாக இருப்பதோடு, நம் ஆரோக்கியத்தை பேணவும் உதவி செய்கிறது.
நமது உடலுக்கு தேவையான 20 அமினோ அமிலங்களில் 18 அமினோ அமிலங்கள் முருங்கைக் கீரையில் உள்ளது. அதோடு, மற்ற உணவுகளுடன் ஒப்பிடுகையில், முருங்கை இலையில் 25 மடங்கு அதிக இரும்புச் சத்து காணப்படுகிறது. எனவே இதனை தொடர்ந்து எடுத்துக் கொண்டு வந்தால், ரத்த சோகை முற்றிலும் நீங்கும்.
முருங்கை பவுடர்
முருங்கை கீரை தொடர்ந்து பயன்படுத்த முடியாதவர்கள், அதனை பவுடர் வடிவில் சேமித்து வைத்துக் கொண்டு பயன்படுத்துவது எளிதாக இருக்கும்.
முருங்கை பவுடர் அல்லது பொடி என்பது முருங்கை மரத்தின் இலைகளை, அதாவது முருங்கை கீரையை உலர வைத்து தயாரிக்கப்படுகிறது. இந்த பொடியை கொண்டு நாம் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை பெற முடியும்.
முருங்கை கீரை முருங்கை கஷாயத்தை காலையில் உட்கொள்வது அதிக நன்மை பயக்கும் என்று சொல்லலாம். இதைப் பயன்படுத்துவது உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல், பற்களை வலுப்படுத்தும்.
முருங்கை கீரை கஷாயம்
முருங்கை இலை கஷாயம் தயாரிக்க முதலில் ஒரு பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீரை சூடாக்கவும். இதன் பிறகு, தண்ணீர் கொதித்ததும் அதனுடன் முருங்கை இலைகளை அல்லது முருங்கை பொடியை சேர்த்து கொதிக்க விடவும்.
தண்ணீர் பாதியாக குறையும் வரை இந்த தண்ணீரை கொதிக்க வைக்கவும். அதன் பிறகு, கருப்பு மிளகு தூள் மற்றும் கருப்பு உப்பு சேர்க்கலாம். அதன் பிறகு வடிகட்டி குடிக்கலாம்.
முருங்கை கீரையில் உள்ல கால்சியம் எலும்புகள் மற்றும் பற்களை வலிமையாக்குவதுடன், எடையைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. முருங்கை இலைகள் இரத்தத்தை சுத்தப்படுத்தவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சர்க்கரை நோயாளிகளுக்கும், இதய நோயாளிகளுக்கும் இது வரப்பிரசாதம் எனலாம்.