எண்ணெய் வழியும் முகத்திற்கு ஐஸ் வாட்டர் ஃபேஷியல் : ட்ரை பண்ணி பாருங்க
பெண்களை பொருத்தவரையில் முகத்தை எப்போதும் அழகாக வைத்துக்கொள்ள வேண்டும் என நினைப்பார்கள். ஆனால் அதனை சீர்குலைக்கும் வகையில் சில பெண்களுக்கு முகத்தில் எண்ணெய் தன்மை அதிகமாக காணப்படும்.
இதனால் என்னதான் நல்ல மேக்கப் பொருட்களை பயன்படுத்தினாலும் குறுகிய நேரத்திலேயே முகம் சோர்வாகவும் பொலிவிழந்தும் காணப்படும்.இந்த பிரச்சினைக்கு தீர்வு கொடுக்கும் ஐஸ் வாட்டர் ஃபேஷியல் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
ஐஸ் வாட்டர் ஃபேஷியல்
ஐஸ் வாட்டர் ஃபேஷியல் எனப்படுவது சில நிமிடங்கள் முகத்தை ஐஸ் வாட்டரில் வைத்திருப்பதை குறிக்கின்றது. ஒரு பாத்திரத்தில் குளிர்ந்த நீரை நிரப்ப வேண்டும். அதில் ஒரு சில ஐஸ் க்யூப்களை சேர்த்து நீரின் வெப்பநிலையை மேலும் குறைத்து பின்னர் முடிந்த வரை அதில் முகத்தை வைக்க வேண்டும்.
இவ்வாறு ஐஸ் வாட்டர் ஃபேஷியல் செய்வதனால் முகத்தில் வழியும் அதிகப்படியான எண்ணெய் கட்டுப்படுத்தப்படுவதுடன் முகத்தில் ஏற்படும் வீக்கம் போன்றவற்றுக்கும் சிறந்த தீர்வு கிடைக்கின்றது.
மேலும் இது சருமத்தை புத்துணர்ச்சி அடைய செய்கிறது. தற்காலிகமாக ரத்த ஓட்டத்தை தடுப்பதன் மூலமாக கண்களுக்கு கீழே இருக்கக்கூடிய கருவளையங்களை குறைய ஆரம்பிக்கின்றது.
சருமத்தை அதிக நேரம் சூரிய கதிர்களுக்கு வெளிப்படுத்துவது அல்லது ஏதேனும் அலர்ஜி காரணமாக சருமத்தில் ஏற்படும் சிவப்பு ரேஷஸ், அரிப்பு மற்றும் எரிச்சல் போன்றவற்றுக்கு ஐஸ் வாட்டர் ஃபேஷியல் தீர்வு கொடுக்கின்றது.
சருமத்தை குளிர்ச்சி அடைய செய்வதோடு, அசௌகரியத்தை போக்கி, எரிச்சலை நீக்குகிறது.
சருமத்தில் உள்ள துளைகளை...
ஐஸ் வாட்டரில் முகத்தை மூழ்குமாறு வைத்திருப்பதால் குளிர்ந்த வெப்பநிலை சருமத்தில் உள்ள துளைகளை சுருங்கச் செய்து சருமத்திற்கு மென்மையான தோற்றத்தை கொடுக்கின்றது.
மேலும் சருமத்தில் அழுக்கு, எண்ணெய் போன்றவை படிந்திருப்பதைக் குறைக்கிறது. சுத்தமான மற்றும் இறுக்கமான துளைகள் மூலமாக முகப்பருக்கள், கரும்புள்ளிகள் போன்றவை உருவாவது தடுக்கப்படுகின்றது.
ஐஸ் வாட்டரை முகத்திற்கு பயன்படுத்தும் பொழுது, சருமத்தின் உறிஞ்சும் தன்மை அதிகரிக்கிறது.இதனால் நாம் பயன்படுத்தும் அனைத்து சர்ம பராமரிப்பு பொருட்களும் நன்கு உறிஞ்சப்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கின்றது.
ஆகவே நீங்கள் எந்த விதமான பொருளை முகத்திற்கு பயன்படுத்தினாலும் அது எளிதில் உங்கள் சருமத்தை சென்றடைகிறது. சீரம், மாய்ஸ்ரைசர் மற்றும் ஃபேஷியல் என அனைத்தும் உங்கள் சரும அடுக்குகளில் எளிதாக சென்றடைவதன் மூலமாக நாம் எதிர்பார்த்த பலனை பெற ஐஸ் வாட்டர் ஃபேஷியல் துணைபரிகின்றது.
காலையில் எழுந்தவுடன் ஐஸ் வாட்டர் கொண்டு முகம் கழுவுவதன் மூலமும் முகத்தில் இருந்து வழியும் அதிகப்படியான எண்ணெயை கட்டுப்படுத்த முடியும்.
எண்ணெய் தன்மையான சருமத்தை உடையவர்கள் தங்களின் அழகுசாதன பொருட்களில் அல்லது பயன்படுத்தும் பேஸ் பேக்கில் பால் பொருட்களை தவிர்த்து கொள்வது சிறந்தது. இதன் மூலம் ஐஸ் வாட்டர் ஃபேஷியலின் முழுமையான பலனை பெற முடியும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |