இதயம் முதல் சருமம் வரை பலப்படுத்தணுமா? காலை எழுந்ததும் இந்த தண்ணீர் குடிங்க
காலையில் எல்லோரும் டீ காபி குடிக்கும் பழக்கம் இருக்கும். இது வேண்டாம் என்று கூறவில்லை ஆனால் இதை விட அற்புதமான பல நல“ல பானங்களை குடிக்கலாம்.
அதில் ஒன்று தான் இந்த திராட்சை நீர். இந்நீரை தொடர்ந்து தினமும் குடிப்பதன் மூலம், சில நாட்களில் உங்கள் உடலில் நீங்கள் பல மாற்றங்களை உணரலாம்.
உலர் திராட்சையில் சர்க்கரைகள் (குளுக்கோஸ் மற்றும் ஃப்ரூக்டோசு), வைட்டமின்கள் (அஸ்கார்பிக் அமிலம், ரிபோஃபிளாவின், தயமீன், பிரிடொட்சீன்), நார்ச்சத்து மற்றும் தாதுக்கள் (ஜின்க், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, மெக்னீசியம், கால்சியம், பொட்டாசியம்) போன்றவை நிறைந்துள்ளன.
எனவே இந்த திராட்சை நிரால் உடலுக்கு என்ன பயன் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
திராட்சை நீர் குடித்தல்
திராட்சைகள் நார்ச்சத்துக்கான நல்ல மூலமாகும். இதன் நீர் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை நீக்கி செரிமான அமைப்பை பலப்படுத்துகிறது.
திராட்சை நீர் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களை சுத்தம் செய்ய உதவுகிறது. இது உடலில் இருந்து நச்சு கூறுகளை நீக்கி, அதன் மூலம் உடலை உட்புறமாக சுத்தப்படுத்துகிறது.
இது தவிர இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலில் இருந்து ஃப்ரீ ரேடிக்கல்களை நீக்கி, முகப்பருவைக் குறைத்து, சருமத்திற்கு இயற்கையான பளபளப்பைக் கொடுக்கும்.
திராட்சையில் பொட்டாசியம் மற்றும் இரும்புச்சத்து போன்ற கூறுகள் உள்ள. எனவே இதை ஊறவைத்து தண்ணீர் குடிக்கும் போது அவை இரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்கவும் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவுகின்றன.
அதிகாலையில் உலர்ந்த திராட்சை நீரைக் குடிப்பது உடலுக்கு உடனடி சக்தியைத் தரும். காரணம் இதில் உள்ள குளுக்கோஸ் மற்றும் பிரக்டோஸ் என்ற சேர்மானங்களாகும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
