கிரீன் டீ-யை 30 நாட்கள் தொடர்ந்து குடித்தால் இவ்வளவு நன்மையா?
கிரீன் டீ-யை தொடர்ந்து 30 நாட்கள் பருகுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
இன்றைய காலத்தில் உடல் எடையைக் குறைப்பதற்கு பல முயற்சிகளை மனிதர்கள் செய்து வரும் நிலையில், கிரீன் டீ உலகில் மிக ஆரோக்கியமான பானமாக இருக்கின்றது.
பல்வேறு நன்மைகளை அளிக்கும் க்ரீன் டீ-யை தொடர்ந்து 30 நாட்களுக்கு தினமும் எடுத்துக் கொண்டால் உடம்பில் பல மாற்றங்கள் நிகழும். அவ்வாறு அறிவியல் பூர்வமாக என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

க்ரீன் டீ-யின் நன்மைகள்
கிரீன் டீ-யில் கேட்டசின்ஸ், எபிகல்லோகேட்டசின் கேலேட் எனப்படும் வீரியம் மிக்க ஆன்டி ஆக்ஸிடன்ட் அதிகமாக இருக்கின்றது. இவை உடம்பில் உள்ள ப்ரீரேடிக்கல்களை எதிர்த்து போராடவும் செய்கின்றது. மேலும் ஆக்ஸினேற்ற அழுத்தத்தினை குறைக்க உதவுவதுடன், முதுமை தோற்றத்தையும் தடுக்கின்றது.

கிரீன் டீ-யில் மிதமான அளவு காஃபின் இருப்பதால் இவை உடலையும், மனதையும் அமைதிப்படுத்துவதற்கு உதவுகின்றது. மேலும் இதிலுள்ள L-theanine என்ற அமினோ அமிலம், நடுக்கம் அல்லது படபடப்பை ஏற்படுத்தாமல் ஆற்றலை வழங்கி சுறுசுறுப்பாக செயல்பட வைக்கின்றது.
வளர்சிதை மாற்றத்தினை மேம்படுத்துவதற்கு கிரீன் டீ உதவுகின்றது. உடம்பில் உள்ள கொழுப்பு எரிப்பை துரிதப்படுத்தவும் செய்கின்றது. ஆனால் உடல் எடையை குறைப்பதற்கு கிரீன் மட்டும் உதவாதாம். இதற்கு முறையான உணவுமுறை மற்றும் உடற்பயிற்சியை எடுத்துக் கொள்வது அவசியம்.

கிரீன் டீ-யை தொடர்ந்து பருகுவதால் இதய ஆரோக்கியம் மேம்படுகின்றது. மேலும் உடம்பில் உள்ள கெட்ட கொழுப்புகள் அளவு குறைவதுடன், ரத்த நாளங்களின் செயல்பாடும் சீராக இருக்கும். ரத்த அழுத்தத்தினை பராமரித்து இதய நோய் ஆபத்தினை குறைக்கின்றது.
கிரீன் டீ-யில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன் செரிமானத்தை மேம்படுத்துகின்றது. வயிறு உப்புசத்தினை குறைத்து, குடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகின்றது.

கிரீன் டீ-யை தொடர்ந்து பருகுவதால் மூளை செயல்திறன் அதிகரிப்பதுடன், நினைவாற்றலும் மேம்படுகின்றது. இதிலுள்ள ஆன்டிஆக்ஸிடன் மூளை செல்களை சேதமடையாமல் பாதுகாத்து, மூளை ஆரோக்கியத்திற்கு உறுதுணையாக இருக்கின்றது.

சருமத்தில் ஏற்படும் பாதிப்புகளை எதிர்த்து போராட செய்கின்றது. தொடர்ந்து கிரீன் டீ குடித்து வந்தால் சருமம் தெளிவு பெற்று இயற்கையான பொலிவு கிடைக்குமாம்.
இரவில் தூங்க செல்லும் முன்பு கிரீன் குடிப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் தூக்கமின்மை பிரச்சனை ஏற்படும். அதே போன்று நாள் ஒன்றிற்கு 3 கப் வீதம் எடுத்துக் கொள்ளலாம். அளவுக்கு அதிகமாக குடிப்பதால் அஜீரணம், நெஞ்செரிச்சல், வயிறு எரிச்சல் மற்றுமு அமிலத்தன்மை பிரச்சனை ஏற்படலாம். மாத்திரை உட்கொள்பவர்கள் மருத்துவ ஆலோசனை பெற்று எடுத்துக் கொள்ளவும்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |