தினமும் இந்த நேரத்துல எலுமிச்சை வேக வைத்த நீரை குடித்தால் எடை சட்டென்று குறையும்...எப்படி தெரியுமா?
எலுமிச்சை வைட்டமின் சி அதிகம் நிறைந்த ஒரு புளிப்புச் சுவைமிக்க ஆரோக்கியமான பழம் என்பதை அனைவருமே அறிவோம்.
இந்த எலுமிச்சையைக் கொண்டு தயாரிக்கப்படும் ஜூஸ் நன்கு சுவையாக இருப்பதோடு, உடலுக்கு பல நன்மைகளை வழங்கக்கூடியது.
எலுமிச்சையின் சாற்றில் மட்டும் சத்துக்கள் இருப்பதில்லை, அதன் தோலிலும் ஏராளமான சத்துக்கள் உள்ளன.

எலுமிச்சையின் தோலில் உள்ள சத்துக்களைப் பெற, எலுமிச்சையை நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து அந்நீரைக் குடிக்க வேண்டும்.
எலுமிச்சை தோலில் உள்ள சத்துக்கள்
எலுமிச்சையில் இருப்பதை போலவே தோலிலும் வைட்டமின் ஏ, வைட்டமின் சி மட்டுமின்றி, கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் ஃபோலேட் அமிலம் போன்றவை அதிகம் நிறைந்துள்ளன.
இது தவிர, உடல் எடையைக் குறைப்பதிலும், சிறுநீரக கற்களைக் கரைப்பதிலும் பயனுள்ளதாக இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
இப்போது நாம் எலுமிச்சை வேக வைத்த நீரை குடிப்பதால் எப்படி எடை குறையும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
உடல் பருமன் குறையும்
எலுமிச்சை வேக வைத்த நீர் உடல் எடையைக் குறைப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
அதுவும் எலுமிச்சை நீரில் தேன் கலந்து குடிப்பதன் மூலம், உடலில் உள்ள கொழுப்புக்கள் விரைவாக குறையத் தொடங்கும் மற்றும் உடலும் நீரேற்றத்துடன் இருக்கும்.

எலுமிச்சை வேக வைத்த நீரை எப்போது குடிப்பது?
எலுமிச்சை நீரை தயாரிப்பதற்கு ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் நீரை ஊற்றி, அதில் பாதி எலுமிச்சையை வெட்டி போட்டு, சுமார் 5 நிமிடங்கள் கொதிக்க வைத்த பிறகு இறக்க வேண்டும்.
குளிர வைத்து, தேன் கலந்து குடிக்க வேண்டும்.
இந்த எலுமிச்சை நீரை காலையில் எழுந்ததும் காபி, டீ-க்கு பதிலாக குடிக்கலாம்.
இருப்பினும், அளவுக்கு அதிகமாக எலுமிச்சை ஜூஸை குடிப்பது சரும அழற்சி மற்றும் அரிப்பை உண்டாக்கும். எனவே இந்த பானத்தை தினமும் குடிப்பதாக இருந்தால், மருத்துவரை ஆலோசித்த பின்னர் தொடங்குங்கள்.